புதிய 2 வீல் டிரைவ் யெட்டியை அறிமுகப்படுத்திய ஸ்கோடா

Skoda Yeti
ரூ.13.35 லட்சத்தில் 2 வீல் டிரைவ் யெட்டி எஸ்யூவியை ஸ்கோடா ஆட்டோ அறிமுகம் செய்துள்ளது.

இந்திய சந்தையில் ஸ்கோடா தற்போது விற்பனை செய்து வரும் யெட்டி எஸ்யூவி 4 வீல் டிரைவ் கொண்ட மாடலாக இருக்கிறது. மேலும், மற்ற எஸ்யூவிக்களை ஒப்பிடும்போது இது மிக அதிக விலையை கொண்டிருப்பதாக மார்க்கெட்டில் கருத்து நிலவுகிறது.

இதனால், யெட்டியின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. வாடிக்கையாளர்களை கவர்ந்து யெட்டியின் விற்பனையை அதிகரிக்க ஒரே வழி குறைந்த விலை வேரியண்ட்டை அறிமுகம் செய்வதுதான் என்ற முடிவுக்கு ஸ்கோடா வந்தது.

இந்த நிலையில், 2 வீல் டிரைவ் கொண்ட புதிய யெட்டி எஸ்யூவியை ஸ்கோடா ஆட்டோ அறிமுகம் செய்துள்ளது. லாரா பிரிமியம் செடான் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 2 லிட்டர் டர்போ டீசல் ஞ்சின்தான் இந்த புதிய யெட்டியிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 110 பிஎச்பி ஆற்றலையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இந்த எஞ்சின் பெர்ஃபார்மென்சில் மட்டுமல்லாது மைலேஜிலும் பின்னும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 வீல் டிரைவ் கொண்ட யெட்டியைவிட புதிய யெட்டி 98 கிலோ எடை குறைவாக இருப்பதால் மைலேஜ் கொடு்ப்பதற்கு முக்கிய காரணமாக ஸ்கோடா தெரிவிக்கிறது.

இந்த புதிய யெட்டி 5 ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கொண்டதாக வந்துள்ளது. புதிய 2 வீல் டிரைவ் யெட்டியில் ஏபிஎஸ், ஏர்பேக்குகள், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன. புதிய யெட்டி ஆக்டிவ் மற்றும் ஆம்பிஷன் ஆகிய இரண்டு பேஸ் வேரியண்ட்களில் மட்டும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 23, 2011, 11:31 [IST]
English summary
Skoda auto has quitly launched 2 wheel drive Yeti suv in Indian market. The new yeti equipped with 2 liter turbo diesel engine. The new Yeti priced at Rs.13.35 lakhs in Maharashtra.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+