ரேபிட் காருக்கு ஆன்லைனில் புக்கிங்கை துவங்கியது ஸ்கோடா

மாசுக்கட்டுப்பாட்டு விதிகளால் உற்பத்தி நிறுத்தப்பட்ட ஆக்டாவியா காருக்கு மாற்றாக ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் சமீபத்தில் புத்தம் புதிய ரேபிட் செடான் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
என்ட்ரி லெவல் செடான் காராக களமிறங்கியுள்ள ரேபிட் மிட் சைஸ் கார் மார்க்கெட்டில் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று ஸ்கோடா கூறியுள்ளது.
மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரேபிட் ஸ்கோடா கூறுவது போன்றே வாடிக்கையாளரின் ஆவலைத் தூண்டும் அம்சங்களுடன் வந்துள்ளது.
விலை, வசதிகள், பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்கள் ஆகிய அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு எதிர்பார்ப்புக்கும், தேர்வுக்கும் ஏற்ற வகையில் வந்துள்ளது ரேபிட்.
இந்த நிலையில், ரேபிட் காருக்கு ஆன்லைனில் புக்கிங்கை துவங்கியுள்ளது ஸ்கோடா. இதுகுறித்து ஸ்கோடா ஆட்டோ தாமஸ் க்யூல் கூறுகையில்,"ரேபிட்டுக்கு ஆன்லைனில் தற்போது புக்கிங்கை துவங்கியுள்ளோம்.
முதல் நாளிலேயே 18 கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. இனி வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








