ரூ.10 லட்சம் விலையில் மினி எஸ்.யூ.வீ. கார்: ஸ்கோடா திட்டம்

மிட்சுபிஷி, டொயோட்டோ, ஜெனரல் மோட்டார்ஸ், ஹூண்டாய், ஸ்கோடா ஆட்டோ நிறுவனங்கள் ஏற்கனவே எஸ்.யூ.வீ. காரை விற்பனை செய்து வருகின்றன. ஆனால், அவற்றின் குறைந்தபட்ச விலை ரூ.15 லட்சத்திற்கும் மேல் உள்ளது.
மேலும், உள்நாட்டை சேர்ந்த மஹிந்திரா நிறுவனம் சைலோ எஸ்.யூ.வீ. காரை ரூ.7.33 லட்சம் முதல் ரூ.12.39 லட்சம் விலையிலும், டாடா மோட்டார்ஸ் தனது சஃபாரி காரை ரூ.8 லட்சம் முதல் ரூ.13 லட்சம் விலையிலும் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில், புதிய மினி எஸ்.யூ.வீ. காரை அறிமுகம் செய்ய ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. உள்நாட்டு நிறுவனங்களின் எஸ்.யூ.வீ. கார்களுக்கு ஸ்கோடா மினி எஸ்.யூ.வீ. கடும் சந்தை போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய எஸ்.யூ.வீ. கார் செடான் கார் மார்க்கெட்டிலும் ஆட்டத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. ரூ.6.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் விலையில் விற்கப்படும் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, வோக்ஸ்வேகன் வென்ட்டோ கார்களின் விற்பனையில் ஸ்கோடாவி்ன் புதிய எஸ்.யூ.வீ. பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.
இதுகுறித்து ஸ்கோடா மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு இயக்குனர் ஒருவர் கூறுகையில்," இந்தியாவில் எஸ்.யூ.வீ. மார்க்கெட் எதிர்பார்த்த வளர்ச்சியை பெறவில்லை. எனவே, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ரூ.10 லட்சம் விலையில் புதிய எஸ்.யூ.வீ. காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








