அடுத்த ஆண்டு ஆப் ரோடு எடிசன் ஃபேபியா: ஸ்கோடா தீவிரம்

முற்றிலும் புதிய கோணத்தில் காஸ்மெட்டிக் மாற்றங்கள் மற்றும் புதிய எஞ்சின்களுடன் ஃபேபியா ஆப் ரோடு எடிசன் வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.
ஸ்கவுட் என்ற பெயரில் வரும் இந்த புதிய ஆப் ரோடு எடிசன் ஃபேபியாவின் சோதனை ஓட்டங்களை ஸ்கோடா ஆட்டோ தீவிரமாக நடத்தி வருகிறது.
ஸ்போர்ட்டி ரூப் ரெயில்ஸ், டியூவல் டோன் கலர்களில் பம்பர், பிளாஸ்டிக் மட்கார்டுகள் உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் புதிய ஆப் ரோடு எடிசன் ஃபேபியா ஸ்கவுட் வருகிறது.
குட்டி ஆல் டிரைவ் கொண்ட ஆப் ரோடு கார் போன்ற தோற்றத்துடன் வரும் ஃபேபியா வாடிக்கையாளர்களை தன் பக்கம் எளிதாக இழுத்துவிடும் என்று தெரிகிறது.
1.6 லிட்டர் எம்பிஎப்ஐ பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் சிஆர்டிஐ டீசல் எஞ்சினுடன் புதிய ஃபேபியா ஸ்கவுட் மார்க்கெட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், ஃபேபியா ஸ்கவுட்டில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் அறிமுகப்படுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
புதிய ஃபேபியா ஸ்கவுட் விற்பனையில் முக்கிய இடத்தை பிடிக்க முடியும் என்று ஸ்கோடா பெரிதும் நம்புவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








