ஸ்கோடா இந்தியா ஜனவரி கார் விற்பனை 51% உயர்வு!

By
Skoda
மும்பை: ஜனவரியில் கார் விற்பனை 51சதவீதம் உயர்வு கண்டதாக ஸ்கோடா இந்தியா தெரிவித்துள்ளது.

செக் குடியரசை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம்,இந்திய சந்தையில் கார் விற்பனை சந்தையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்து வருகிறது.ஸ்கோடாவின் ஃபேபியா,ஆக்டாவியா,லாரா உள்ளிட்ட மாடல்கள் இந்திய வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.

இதனால்,ஸ்கோடா நிறுவனத்தின் கார் விற்பனை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.ஜனவரி மாதத்தில் கார் விற்பனை 51சதவீத வளர்ச்சி கண்டதாக அந்த நிறுவனம் தெரிவி்த்துள்ளது.

இதுகுறித்து ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

"கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட யெட்டி மினி எஸ்யூவீ விற்பனை உயர்வுக்கு முக்கிய காரணம்.அறிமுகமான குறுகிய காலத்தில் யெட்டிக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும்,இந்தியாவின் 8 கார் விருதுகளையும் யெட்டி பெற்றுள்ளது.

இந்த ஆண்டு துவக்கம் எங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது.ஜனவரி மாதத்தில் 2,825 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு ஜனவரி விற்பனையை(1,881)ஒப்பிடும்போது,இந்த ஆண்டு ஜனவரியில் கார் விற்பனை 51சதவீதம் உயர்வு கண்டுள்ளது,"என்றார்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 12, 2011, 16:36 [IST]
English summary
Skoda India registered boost in sales figures by 51% in January 2011 as compared to last year figures. Czech based car maker sold 2825 units last month, compared to just 1881 unit sold in January 2010.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+