கார்களுக்கு ரூ.1,00,000 வரை நேரடி பணச்சலுகைகள்: ஸ்கோடா வழங்குகிறது

Skoda Fabia
தனது அனைத்து பெட்ரோல் கார் மாடல்களுக்கும் ரூ.28,000 முதல் ரூ.1,00,000 வரை பண்டிகை கால சிறப்பு சலுகைகளை ஸ்கோடா ஆட்டோ வழங்குகிறது. வரும் 31ந் தேதி வரை இந்த சிறப்பு சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடாவின் பிரிமியம் செடான் காரான லாரா ஆக்டிவ் செடான் கார் மாடலுக்கு ரூ.1,00,000 வரை நேரடி பணச்சலுகையை ஸ்கோடா வழங்குகிறது. இதேபோன்று, ஸ்கோடா லாரா ஆம்பிஷன் வேரியண்டுக்கு ரூ.60,000 வரை பணச்சலுகை வழங்கப்படுகிறது.

ஹோண்டா சிவிக்கை ஒப்பிடுகையில் தற்போது ஸ்கோடா லாரா ரூ.1.5 லட்சம் வரை குறைவான விலையில் தற்போது கிடைக்கிறது. இதேபோன்று, ஸ்கோடா ஃபேபியா ஹேட்ச்பேக் காருக்கு வேரியண்ட்டுகளுக்கு தக்கவாறு ரூ.28,700 முதல் ரூ.61,700 வரை சிறப்பு தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ஸ்கோடோ ஃபேபியா 1.6 லிட்டர் எலிகன்ஸ் வேரியண்ட்டுக்கு ரூ.61,700 நேரடி பணச்சலுகை வழங்கப்படுகிறது. இதனால், தற்போது டாப் வேரியண்ட்டான எலிகன்ஸ் ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையில் விற்கப்படுகிறது. மேலும், 1.2 லிட்டர் எஞ்சின் கொண்ட ஃபேபியா எலிகன்ஸ் ரூ.5.25 லட்சம் ஆரம்ப விலையில் விற்கப்படுகிறது.

ஏர்பேக்ஸ், ஏபிஎஸ், இபிடி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய மிட்வேரியண்ட் ஃபேபியா ஆம்பியன்ஸ் காருக்கு ரூ.44,700 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால், இந்த வேரியண்ட் தற்போது ரூ.4.54 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஃபோர்டு பிகோ டைட்டானியம் வேரியண்ட் ரூ.4.67 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதை ஒப்பிடும்போது ஸ்கோடா ஃபேபியா 1.2 ஆம்பியன்ஸ் விலை குறைந்ததாக உள்ளது. ஸ்கோடாவின் சிறிய ரக யெட்டி எஸ்யூவிக்கு ரூ.75,000 வரை நேரடி பணச்சலுகையை ஸ்கோடா வழங்குகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, October 7, 2011, 12:49 [IST]
English summary
Czhech Republic car maker Skoda Auto has offered huge discounts to lure customers this festive season. The offers is available for Select models of Skoda Laura sedan, Skoda Fabia hatchback and Skoda Yeti have got straight cash discounts on their purchases. The offer is valid only till October 31st. The All Skoda petrol model cars gets price cut.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+