ரூ.6.75 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ரேபிட் காரை அறிமுகப்படுத்தியது ஸ்கோடா

பெரும் எதிர்பார்ப்புடன் ஸ்கோடா ஆட்டோ அறிமுகப்படுத்தியுள்ள ரேபிட் கார் வோக்ஸ்வேகன் வென்ட்டோ பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால், வடிவமைப்பு செலவீனம் குறைந்ததால் வென்ட்டோவைவிட சிறிது குறைந்த விலையில் ரேபிட்டை அறிமுகம் செய்துள்ளது ஸ்கோடா.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரேபிட் ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் எலிகன்ஸ் ஆகிய 3 வேரியண்ட்களில் கிடைக்கும்.
இதில், பெட்ரோல் மாடல் ரூ.6.75 லட்சம் ஆரம்ப விலையிலும், டீசல் மாடல் ரூ.7.95 லட்சம் ஆரம்ப விலையிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோக்ஸ்வேகன் வென்ட்டோவைவிட (ரூ.7.99 லட்சம்) ரேபிட் டீசல் மாடல் ரூ.4,000 குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ரேபிட் செடான் காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 106 பிஎச்பி ஆற்றலையும், 160 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
டீசல் மாடலிலும் 1.6 லிட்டர் எஞ்சின்தான் என்றாலும் அது 105 பிஎச்பி ஆற்றலையும், 253 என்எம் டார்க் பவரையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். வென்ட்டோவில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின்கள்தான் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மாடலிலும், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடலிலும் ரேபிட் கிடைக்கும் என்று ஸ்கோடா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








