ஸ்கோடா ரேபிட் செடான் கார்: சிறப்பு பார்வை

Skoda Rapid
தரத்தை தாரக மந்திரமாக கொண்ட ஸ்கோடாவிடமிருந்து வந்துள்ள மற்றொரு தரமான படைப்பு ரேபிட் செடான் கார். சின்ன காரிலிருந்து அடுத்ததாக மிட்சைஸ் காருக்கு மாறுபவர்களுக்கு சரியான தேர்வாக வந்துள்ளது ரேபிட்.

மாசுக் கட்டுப்பாட்டு விதிகளால் உற்பத்தி நிறுத்தப்பட்ட ஆக்டாவியா செடான் காரின் இடத்தை நிரப்புவதற்காக ஸ்கோடா களமிறக்கியுள்ள புத்தம் புதிய மிட் சைஸ் கார்தான் ரேபிட்.

மிட் சைஸ் கார் சந்தையில் கடும் போட்டி நிலவினாலும் இந்திய வாடிக்கையாளர்கள் எதை விரும்புகின்றனர் என்பதை புரிந்துகொண்டு ரேபிட்டை களமிறக்கியுள்ளது ஸ்கோடா.

ஸ்கோடாவின் தாய் நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வென்ட்டோ பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரை, வடிவமைப்பு செலவினங்கள் மிச்சமானதால் வென்ட்டோவை விட சற்று குறைவான விலையில் அறிமுகம் செய்துள்ளது ஸ்கோடா.

வெளிப்புற வடிவமைப்பு:

கண்ணை மூடிக்கொண்டு காரின் மீது கையை வைத்தால்கூட 'சாட்சாத்' இது ஸ்கோடா கார்தான் என்று கூறிவிடலாம். ஆம், ஸ்கோடா கார்களுக்கே உரித்தான தரமான பில்டு குவாலிட்டியுடன் இந்த கார் வந்துள்ளது.

போட்டியை கருத்தில்க்கொண்டு வென்ட்டோவை விட முன்பக்கம் அதிக கவர்ச்சியை கொண்டிருக்கும் வகையில் ரேபிட்டை வடிவமைத்துள்ளது ஸ்கோடா ஆட்டோ.

முன்பக்க கிரில், ஹெட்லைட்டுகளின் டிசைன் மற்றும் பனி விளக்குகள் ஆகியவை ஃபேபியா காரிலிருந்து உருவி அப்படியே இதில் பொருத்தப்பட்டிருப்பது போல் இருக்கிறது.

அதேவேளை, பேபியாவை விட பெரிய காராகவும், வென்ட்டோவை விட முன்பக்கம் கூடுதல் அழகையும் கொண்டிருக்கும் வகையில் பேனட்டை வடிவமைத்து அசத்தியிருக்கிறது ஸ்கோடா.

பின்பக்கம் டேஞ்சர் விளக்குகள், ரியர் பம்பர் மற்றும் இதர பகுதிகளை ஒரு செடான் காருக்கு தேவையான
வகையில் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.

உட்புற வடிவமைப்பு:

4 ஸ்போக் ஸ்டீயரிங் வீலை கொண்டிருப்பதால் கைகளுக்கு பாதுகாப்பாகவும், அச்சமில்லாமல் காரை ஓட்டுவதற்கான உணர்வை தருகிறது.

அதேவேளை, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள் இல்லதாதது பெரிய குறைதான்.

தற்போது பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களிலேயே ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகளுடன் வருகின்றன. ஆனால், ரேபிட்டில் ஏன் இந்த குறையை ஸ்கோடா வைத்தது என்று புரியவில்லை.

கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தை கொண்டிருக்கும் டேஷ் போர்டு பார்க்க டீசன்ட்டாக இருக்கிறது. ஸ்விட்சுகள், ஏசி வென்ட்டுகள் மற்றும் ஸ்பீடோ மீட்டர் கன்சோல் ஆகியவை இருக்க வேண்டிய இடத்தில் கனக்கச்சிதமாக பொருந்தியுள்ளது.

ஆக்சிலேட்டர், கிளட்ச் மற்றும் பிரேக் பெடல்கள் நல்ல வசதி கொண்டதாக இருக்கிறது. ஆனால், டெட் பெடல் இல்லை.

ஹெட்போன், ஆக்ஸ் போர்ட் வசதிகளுடன் கூடிய ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. கிளவ் பாக்சும் அதிக பொருட்களை வைக்க கூடிய அளவுக்கு உள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் முன் இருக்கை மற்றும் பின் இருக்கைகளின் நடுவில் ஆர்ம் ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்பக்கம் உள்ள ஆர்ம் ரெஸ்ட் நீண்ட தூரம் பயணங்களின்போதும் இடது கைக்கு அலுப்பு தராமல் பார்த்துக்கொள்ளும். ஆர்ம் ரெஸ்ட்டில் கை வைத்துக்கொண்டே கியரை மாற்றலாம்.

பின் இருக்கைகள் தொடைக்கு நல்ல சப்போர்ட் கொடுக்கும் வகையில் இருந்தாலும், பின்புறம் 2 பேர் மட்டுமே தாராளமாக அமர்ந்து செல்ல முடியும். நடுவில் ட்ரான்ஸ்மிஷன் டியூனல் மிக உயரமாக இருப்பதால் நடுவில் அமர்ந்து செல்பவர் கால்களை நேராக வைத்து பயணம் செய்வது சிரமமாக இருக்கும்.

4 கதவுகளிலும் டோர் பாக்கெட்டுகள் இருப்பதால் பொருட்கள் மற்றும் வாட்டர் பாட்டில்களை வசதியாக தனித்தனியாக வைத்துக்கொள்ளலாம். மேலும், பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களுக்கு தனியாக ஏசி வென்ட்டும் இருக்கிறது.

எஞ்சின்:

வோக்ஸ்வேகன் வென்ட்டோவில் பொருத்தப்பட்டிருக்கும் அதே பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களுடன் வந்துள்ளது ரேபிட்.

இரண்டு மாடல்களிலும் 4 சிலிண்டர் கொண்ட 1598 சிசி திறன் கொண்ட 1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

இதில் பெட்ரோல் எஞ்சின் 5250 ஆர்பிஎம் வேகத்தில் 105 பிஎச்பி ஆற்றலையும், டீசல் எஞ்சின் 4,400 ஆர்பிஎம் வேகத்தில் 105 பிஎச்பி ஆற்றலையும் வெளிப்படுத்தும்.

5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல்களில் வந்துள்ள ரேபிட் பெட்ரோல் மாடலின் மிட் மற்றும் டாப் வேரியண்ட்டுகளில் மட்டும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்சுடன் கிடைக்கிறது.

ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் எலிகன்ஸ் ஆகிய 3 வேரியண்ட்டுகளில் வந்துள்ள ரேபிட் காரின் விலை விபரங்களை காணலாம்.

பெட்ரோல் மாடல் மேனுவல் கியர் பாக்ஸ்:

ஆக்டிவ்: ரூ.6.75 லட்சம்

ஆம்பிஷன்: ரூ7.09 லட்சம்

எலிகன்ஸ்: ரூ.7.99 லட்சம்

பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்:

ஆம்பிஷன்: ரூ.8.09 லட்சம்

எலிகன்ஸ்: ரூ.8.99 லட்சம்

டீசல் மேனுவல் கியர் பாக்ஸ்:

ஆக்டிவ்: ரூ.7.95 லட்சம்

ஆம்பிஷன்:ரூ.8.09 லட்சம்

எலிகன்ஸ்: ரூ.9.19 லட்சம்

இங்கே கொடுக்கப்பட்டுள்ள விலை விபரங்கள் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைகளை அடிப்படையாக கொண்டது.

More from DriveSpark

Article Published On: Monday, November 21, 2011, 10:36 [IST]
English summary
Skoda auto has launched mid size Rapid sedan car recently. Here are given some features and specifications of Rapid.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+