என்டிடிவி நிகழ்ச்சியில் புதிய ரேபிட் செடான் காரை அறிமுகப்படுத்தியது ஸ்கோடா

கடந்த மாதம் பிராங்பர்ட்டில் நடந்த ஆட்டோ ஷோவில் இந்த கார் முதன்முறையாக காட்சிக்கு வைத்திருந்தது ஸ்கோடா.
இதைத்தொடர்ந்து, இந்திய சந்தையில் இந்த புத்தம் புதிய காரை விரைவில் அறிமுகம் செய்யப்போவதாக அந்த நிறுவனம் அறிவித்தது.
இதனால், மிட்சைஸ் செடான் கார் வாங்க திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
மேலும், புனே அருகே சகனிலுள்ள தனது ஆலையில் ரேபிட் உற்பத்தியையும் ஸ்கோடா ஆட்டோ துவங்கியதால் ஆவல் அதிகரித்தது.
இந்த நிலையில், எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அதேசமயம் புதுமையான முறையில் தனது ரேபிட் காரை ஸ்கோடா ஆட்டோ அறிமுகம் செய்துள்ளது.
என்டிடிவி செய்தி சேனலில் கார் அண்ட் பைக் ஷோ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி துவங்கப்பட்டு எட்டாவது ஆண்டு பிறப்பதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் தனது ரேபிட் காரை அறிமுகப்படுத்தி விழாவிற்கு வந்தவர்களை பரவசப்படுத்தியது ஸ்கோடா.
அருமையான வடிவமைப்பு, பில்டு குவாலிட்டி, தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய ரேபிட் வந்துள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு பிரச்னையால் சமீபத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்ட ஆக்டாவியா செடான் கார் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இந்த புதிய காரை ஸ்கோடா அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஸ்கோடா ரேபிட் கார் அறிமுகம் செய்யப்பட்ட சிறப்பு நிகழ்ச்சி என்டிடிவி செய்திச் சேனலில் வரும் சனிக்கிழமை மதியும் 1.30 மணிக்கும், ஞாயிற்று்க்கிழமை இரவு 7 மணிக்கும் ஒளிப்பரப்பாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








