புத்தம் புதிய லாரா: ஸ்கோடா அறிமுகப்படுத்துகிறது

வோக்ஸ்வேகன் கீழ் இயங்கும் செக் குடியரசை சேர்ந்த ஸ்கோடா, தரமான பில்டு குவாலிட்டி கொண்ட கார்களை தயாரிப்பதில் பெயர்போன நிறுவனம்.
கையாளுமையிலும், பெர்ஃபார்மென்சிலும் ஸ்கோடா கார்கள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக, அந்த நிறுவனத்தின் ஆக்டாவியா கார்கள் மேல்தட்டு மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்து வந்தது.
இந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு விதிகளால் ஆக்டாவியா உற்பத்தியை நிறுத்த ஸ்கோடா முடிவு செய்துள்ளது. ராலி ஸ்போர்ட்ஸ் ரக காரான ஆக்டாவியா உற்பத்தி நிறுத்தப்படுவதால், அந்த இடத்தை நிரப்புவதற்கு தகுதியான காரை அறிமுகப்படுத்த ஸ்கோடா முடிவு செய்தது.
இதன்படி, ராலி ஸ்போர்ட்ஸ் ரகத்தை சேர்ந்த புதிய லாராவை ஸ்கோடா அறிமுகப்படுத்துகிறது. புதிய லாரா 160பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.8 டிஎஸ்ஐ எஞ்சினுடன் வருகிறது.
மேலும், ஸ்கோடாவின் வழக்கமான பில்டு குவாலிட்டி உத்தரவாதத்துடன் வரும் புதிய லாரா நிச்சயம் ஆக்டாவியா வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








