வரும் 16ந் தேதி ரேபிட்டை முறைப்படி அறிமுகப்படுத்துகிறது ஸ்கோடா
கடந்த மாதம் என்டிடிவி ஆட்டோ நிகழ்ச்சியில் காட்சிப்படுத்திய தனது புதிய செடான் காரை வரும் 16ந் தேதி மார்க்கெட்டில் களமிறக்க ஸ்கோடா நாள் குறித்துள்ளது. இதனால், செடான் கார் மார்க்கெட்டில் மேலும் பரபரப்பு கூட உள்ளது.
பில்டு குவாலிட்டியில் பெயர் பெற்ற ஸ்கோடா கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப புதிய கார்களையும் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.
கடந்த மாதம் பிரிமியம் செடான் காரான லாராவை அறிமுகப்படு்த்திய அந்த நிறுவனம் தற்போது புத்தம் புதிய மிட் சைஸ் செடான் காரான ரேபி்ட்டை அறிமுகம் செய்கிறது.
வரும் 16ந் தேதி ரேபிட்டை முறைப்படி மார்க்கெட்டில் களமிறக்குகிறது ஸ்கோடா. மேலும், ரேபிட்டின் உற்பத்தியை ஸ்கோடா ஏற்கனவே துவங்கிவிட்டதால், காத்திருப்பு காலம் அதிகமில்லாமல் வாடிக்கையாளர்கள் டெலிவிரி பெற முடியும்.
1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டர்போ டீசல் எஞ்சினுடன் ரேபிட் வருகிறது. மேலும், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களில் மட்டும் ரேபிட் அறிமுகமாகிறது. மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கார் ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








