புதிய ரேபிட் செடான் கார் உற்பத்தியை துவங்கியது ஸ்கோடா

இந்திய சாலைநிலைகள் மற்றும் தட்பவெப்பத்திற்கு ஏற்ற வகையில் புதிய செடான் காரை ஸ்கோடா ஆட்டோவடிவமைத்துள்ளது. சமீபத்தில் பிராங்பர்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
தனது தாயகமான ஐரோப்பிய சந்தையில் கூட அறிமுகம் செய்யாமல் இந்திய சந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஸ்கோடா அறிமுகம் செய்ய இருக்கும் இந்த மிட்சைஸ் செடான் கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்கோடாவின் தாய் நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வென்ட்டோ காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின்களுடன் இந்த கார் மார்க்கெட்டிற்கு வர இருக்கிறது.
இந்த காரை வென்ட்டோவைவிட குறைந்த விலையில், அதாவது ரூ.6 லட்சம் முதல் ரூ.7 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்ய ஸ்கோடா திட்டமிட்டுள்ளதால் மார்க்கெட்டில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
இந்த நிலையில், ரேபிட் கார் உற்பத்தியை புனே அருகிலுள்ள சகனிலுள்ள தொழிற்சாலையில் ஸ்கோடா ஆட்டோ நேற்று துவங்கியது. இதனால், ரேபிட் செடான் கார் விரைவில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








