ஸ்கோடாவின் புதிய ரோட்ஸ்டெர் மாடல் கான்செப்ட் கார் அறிமுகம்

ஆஸ்திரிய நாட்டிலுள்ள லேக் வொர்த்தர்ஸீ என்ற இடத்தில் ஆண்டுதோறும் கார் கண்காட்சி நடக்கிறது. இந்த ஆண்டுக்கான கண்காட்சி சமீபத்தில் நடந்தது. அதில், ஏராளமான கார் உற்பத்தி நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களது படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தன.
அதில், ஸ்கோடா அறிமுகப்படுத்திய ஆர்எஸ் 2000 என்ற ரோட்ஸ்டெர் வகையை சேர்ந்த கான்செப்ட் கார் அனைவரையும் கவர்ந்தது. இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் இந்த கான்செப்ட் காரை இழைத்து குழைத்து வடிவமைத்துள்ளது ஸ்கோடா.
நான்கு கதவுகளுடன் திறந்துமூடும் கூரை கொண்ட இந்த காரின் வடிவமைப்பு பாய்வதற்காக பதுங்கும் புலியை போன்று இருக்கிறது. கண்காட்சிக்கு வந்த ஏராளமான இளசுகள் காருக்கு முன் நின்று தங்களை கேமராவில் பதிவு செய்துகொண்டனர். இதுதவிர, புதிய ஃபேபியா கார் மாடலையும் கண்காட்சியில் இடம்பெற செய்திருந்தது ஸ்கோடா.


Click it and Unblock the Notifications








