வரும் 7ந் தேதி புதிய ரேபிட் காரை அறிமுகப்படுத்த ஸ்கோடா திட்டம்

இந்த செக்மெண்ட்டில் மாருதி டிசையர் தற்போது தனிக்காட்டு ராஜாவாக இருந்து வருகிறது. ஆனால், நிசான் சன்னி மிட்சைஸ் காராக இருந்தாலும், விலையை பொருத்தவரை அது என்ட்ரி லெவல் செடான் கார்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்று, குறைந்த விலையில் ரேபிட்டை அறிமுகப்படுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், என்ட்ரி லெவல் கார்களுக்கு மட்டுமின்றி, மிட்சைஸ் கார்களுக்கும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாரேட்டா அல்லது ரேபிட் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் இந்த கார் தற்போது எஸ்கே-251 என்ற குறியீட்டு பெயரில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த கார் வோக்ஸ்வேகன் வென்ட்டோவில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சினுடன் வர இருக்கிறது. ஆனால், வென்ட்டோவைவிட ரேபிட் குறைந்த விலையில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஆட்டோ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








