வரும் ஜூனில் லிவா அறிமுகம்:டொயோட்டோ

பிரையோ சிறிய காரை அறிமுகம் செய்யப்போவதாக ஹோண்டா அறிவித்ததும், எட்டியோசுக்கு அதிக புக்கிங் காரணமாகவும் லிவா அறிமுகத்தை டொயோட்டோ தள்ளிவைத்துக்கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து, ஜப்பான் நிலநடுக்கத்தால், லிவாவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய டொயோட்டோ முடிவு செய்தது.
இந்த நிலையில், ஜப்பானிலிருந்து உதிரிபாகங்கள் சப்ளை சீரடைந்துள்ளதால், டொயோட்டோ தொழிற்சாலைகளில் வழக்கமான உற்பத்தி துவங்க இருக்கிறது. இதையடுத்து, லிவாவை வரும் ஜூன் மாத இறுதியில் அறிமுகம் செய்யடொயோட்டோ திட்டமிட்டுள்ளது.
டொயோட்டோ துணை மேலாண் இயக்குனர் சந்தீப் சிங் கூறுகையில்," வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லிவாவை வரும் ஜூன் மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறோம். மேலும், எட்டியோஸ் டீசல் மாடலையும் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட எட்டியோஸ் செடான் காரின் பேஸ் மாடலில் வரும் எட்டியோஸ் லிவா ரூ.4.5 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என கருதப்படுகிறது. மேலும், மாருதி ரிட்ஸ், ஹூண்டாய் ஐ10, ஃபிகோ ஆகிய கார்களுக்கு லிவா கடும் சந்தை போட்டியை கொடுக்கும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








