உலகின் மிக குறைந்த விலை கார்- சிறப்பு பார்வை

Tata Nano
மிக மிக குறைந்த விலையில், சிறிய உருவத்தில் தொழில்நுட்பத்தை புகுத்தி ஒரு காரை உருவாக்குவதில் பல சவால்கள் இருக்கின்றன. இதனாலேயே, உலகின் பல ஜாம்பவான் நிறுவனங்கள் சிறிய ரக கார், அதுவும் குறைந்த விலையில் தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபடவில்லை. ஆனால், நானோ காரை உருவாக்கி டாடா மோட்டார்ஸ் உலகிற்கே தனது தொழில்நுட்ப வலிமையை பரைசாற்றியது.

மேலும், சர்வதேச சந்தையிலும் நானோ காரை கொண்டு செல்லும் முயற்சிகளை டாடா மேற்கொண்டுள்ளது. இருந்தாலும், அந்த கார் வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றால்தான் அது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு கிடைத்த முழு வெற்றியாக கருதமுடியும். ஆனால், நானோ அப்படியொரு முழுமையான வெற்றியை இதுவரை பதிவு செய்யவில்லை.

குறைந்த விலை என்ற ஒரே பலத்தோடு நானோ காரை தூக்கி நிறுத்த டாடா மோட்டார்ஸ் முயன்று வருகிறது. சந்தோஷத்தின் சாவி என்று டாடா மோட்டார்ஸ் விளம்பரப்படுத்தி வரும் நானோ உண்மையில் சந்தோஷத்தின் சாவியா அல்லது தோஷத்தின் சாவியா என்பதை பார்க்கலாம்.

நானோ கார் எட்டுவிதமான வேரியண்டுகளில் கிடைக்கிறது. நானோ பிஎஸ்-2, பிஎஸ்-3, சிஎக்ஸ் பிஎஸ்-2, சிஎக்ஸ்-3, எல்எக்ஸ் பிஎஸ்-3,பிஎஸ்-4, சிஎக்ஸ்-4, எல்எக்ஸ் பிஎஸ்-4 ஆகிய வேரியண்டுகளில் மாசுக்கட்டுப்பாட்டு அம்சங்களை அடிப்படையாக கொண்ட மாடல்களில் கிடைக்கிறது.

எஞ்சின்:

2 சிலிண்டர் கொண்ட 624 சிசி எம்பிஎப்ஐ பெட்ரோல் எஞ்சின் நானோ காரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 35 பிஎச்பி ஆற்றலையும், அதிகபட்சம் 48 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில், 4 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

வெளிப்புற வடிவமைப்பு:

இந்திய சாலை நிலவரங்களுக்கு ஏதுவாக, ஸ்போர்ட்டி டைனமிக்ஸ் வடிவமைப்புடன் நானோ உருவாக்கப்பட்டுள்ளது. பாடி கலர் பம்பர், முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் பனி விளக்குகள், பாடி கலர் ஹேண்டில்ஸ் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு அம்சங்களுடன் மற்ற கார்களுடன் நானோ போட்டி போடுகிறது.

உள்பக்க வடிவமைப்பு:

குறைந்த விலை கார் என்பதற்காக மிகமிக மட்டமான பாகங்களை பயன்படுத்தியிருப்பார்களோ என்ற ஐயத்தைபோக்குகிறது நானோவின் உள்பக்கம். டியூவல் டோன் டேஷ் போர்டு, தரமான இருக்கைகள் உள்ளிட்டவை நானோவின் பலத்தை கூட்டுகிறது.

சொகுசு மற்றும் கையாளுமை:

ஏர்கண்டிஷன், முன்பக்க கன்சோலில் கப் ஹோல்டர், கியர் ஷிப்டு கன்சோல், பவர் விண்டோஸ், டிரைவர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, ஹெட்லைட் லெவலிங், மடக்கும் வசதியுடன் பின்பக்க இருக்கை, எரிபொருள் எச்சரிக்கை இண்டிகேட்டர் என போதுமான அளவு சொகுசு அம்சங்கள் நானோவில் இருக்கிறது.

வெளிப்பக்கம் பார்ப்பதற்கு குருவிக்கூடு போல இருந்தாலும், உள்பக்கம் 4 பேர் தாராளமாக அமர்ந்து செல்லும் வசதியை நானோ கொடுக்கிறது. மேலும், போக்குவரத்து மிகுந்த மாநகரங்களில் ஓட்டுவதற்கு சிறந்த காராக இருக்கிறது.

பெர்ஃபார்மென்ஸ்:

இதில், 0.6 லிட்டர் எஞ்சினை மட்டுமே கொண்டிருப்பதால், அதிக பெர்ஃபார்மென்சை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், 35 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் இதன் எஞ்சின் வெறும் 12 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடுகிறது. நானோவின் 4 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்மூத்தாக இருக்கிறது. ஆனால், கியர் பாக்ஸின் தரத்தை இன்னும் கூட்ட வேண்டிய அவசியம் டாடாவுக்கு இருக்கிறது என்பதை கண்டிப்பாக கூறலாம்.

பாதுகாப்பு:

சென்ட்ரல் லாக்கிங், பவர் டோர் லாக், ஹேலஜன் ஹேட்லைட்ஸ் மற்றும் சீட் பெல்ட் ஆகியவை பாதுகாப்பான பயணத்துக்கு உறுதுணையாக இருக்கும்.

மைலேஜ்:

அதிக மைலேஜ் கொடுக்கும் கார்களின் வரிசையில் நானோ முக்கிய இடத்தை பெறுகிறது. நகர்ப்புறங்களில் நானோ கார் லிட்டருக்கு 22 கிமீ செல்கிறது. அதேவேளை, நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 26 கிமீ வரை செல்கிறது.

விலை:

ஸ்மால் அண்ட் ஸ்வீட் நானோ கார் ரூ.1.40 லட்சம் முதல் ரூ.1.85 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யபடுகிறது.

சாதகங்கள்:

குறைந்த விலை, அதிக மைலேஜ், நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு ஏற்ற சிறிய கார்.

பாதகங்கள்:

தீப்பிடித்தல், சரிவான பகுதிகளில் நிறுத்துவதற்கு ஏற்ற ஹேண்ட் பிரேக் இல்லாதது, பின்பக்க எஞ்சின், மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்வதற்கே திணறும் எஞ்சின், தரமான மெட்டல் தகடுகளுடன் வடிவமைக்காதது உள்ளிட்ட பல குறைகள் ஆங்காங்கே நானோவை ஆக்கிரமித்துள்ளன.

டாடா மோட்டார்ஸ் எதிர்பார்க்கும் வகையில் நானோ விற்பனையை அதிகரிப்பதற்கு, நானோ கார் திடீரென தீப்பற்றுவது குறித்து முதலில் ஆய்வு செய்து அதை போக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், டீசல் நானோ கார் வந்தால் டாடாவின் நானோ கனவு முழுமையான வெற்றிபெறும் என்பது திண்ணம்.

Article Published On: Tuesday, September 13, 2011, 12:31 [IST]
English summary
Tata motors have been dominating the Indian auto-market since 1954. The company has achieved success in various automobile segments like trucks, commercial vehicles and passenger cars. Tata Motors set another benchmark by introducing India’s cheapest car, Tata Nano. Tata Nano stands as an exemplary specimen of intelligent designing and prudent engineering. The “Key of Happiness”, Tata Nano made its debut at Auto Expo, 2008 in New Delhi. The car has its sole identity in the auto-market and gives the buyer a ride of comfort at a nominal price tag.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+