இந்தியாவுக்கு ஏற்ற புதிய ஸ்மார்ட் எஞ்ஜின்: ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகம்

General Motors
டெல்லி: இந்திய சாலைகள் மற்றும் தட்பவெப்பத்திற்கு ஏற்ற நவீன தொழில்நுட்பம் கொண்ட புதிய எஞ்ஜினை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகப் பிரிவு தலைவர் கூறியதாவது:

"அனைத்து சாலைகள் மற்றும் தட்பவெப்ப நிலையிலும் சிறப்பாக இயங்கும் வகையில் புதிய எஞ்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கு அனைத்து விதத்திலும் ஏற்றதாக இருக்கும்.

பெங்களுரில் உள்ள ஆய்வு மையத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த எஞ்ஜின் 1.2 லிட்டர் வகையை சேர்ந்தது. இதில் அலுமினியம் ஹெட்டுகள் பொருத்தப்பட்டுள்ளது. இலகுவான எடைகொண்ட பிஸ்டன்களை கொண்டிருப்பதால் எஞ்ஜினுக்கு எரிபொருள் சப்ளை சீராக இருக்கும். இதனால் எரிபொருள் சிக்கனமும் கிடைக்கும்.

இதன் எடை குறைந்த கிராங்க் சாப்ட், எஞ்ஜினிலிருந்து வெளிவரும் சப்தத்தை வெகுவாக குறைக்கும். நவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த புதிய எஞ்ஜின் மகாராஷ்டிராவிலுள்ள தலேகான் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளது. எங்களது புதிய மாடல் கார்களுக்கு இந்த எஞ்ஜினைத்தான் பொருத்தத் திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 29, 2011, 13:07 [IST]
English summary
A new engine designed locally to suit the Indian condition has been launched by General Motors. The company said the design of the engine is from its Bangalore plant and is under 1.2 lit which will be on production from its Talegaon plant.GM plans to fit this engine for the new models of vehicles in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+