சூரிய மின்சக்தியில் இயங்கும் கார் ஏசி: ஹாங்காங் வல்லுனர்கள் சாதனை

மேலும், கார் நிற்கும்போதுகூட எஞ்சின் இயங்கினால்தான் ஏசி வேலை செய்யும் என்பதால் காருக்கு எகிடுதகிடாக எரிபொருள் செலவாகிறது.
இந்த நிலையில், எரிபொருளை மிச்சப்படுத்தி செலவை குறைக்கும் வகையில், ஹாங்காங் பாலிடெக்னிக்கை சேர்ந்த விஞ்ஞானிகள் சூரிய மின்சக்தியில் இயங்கும்(சோலார் ஏசி) புதிய கார் ஏசியை கண்டுபிடித்துள்ளனர்.
கார்களின் கூரை மீது அமைக்கப்பட்டுள்ள சோலார் பேட்டரிகள் சூரிய ஒளியிலிருந்து மின்சக்தியை உற்பத்தி செய்து காரில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரியில் சேமிக்கும்.
கார் நிற்கும்போது இந்த பேட்டரியிலிருந்து ஏசி மிஷினுக்கு மின் சப்ளை செய்யும் விதத்தில் இந்த சோலார் கார் ஏசி உருவாக்கப்பட்டுள்ளது. சூரிய மின்சக்தி மூலம் காரில் உள்ள ஏசி மிஷினுக்கு 2 மணிநேரத்துக்கு தேவையான மின்சப்ளையை அந்த பேட்டரி வழங்கும்.
இதன்மூலம், காரை நிறுத்தினால்கூட எஞ்சின் இயங்க வேண்டிய அவசியம் இருக்காது. சோலார் பேட்டரி மூலம் ஏசி தொடர்ந்து இயங்கும்.
இதன்மூலம், கணிசமான எரிபொருள் மிச்சப்படும் என்பதோடு, காரிலிருந்து வெளியேறும் புகை குறையும் என்பதால் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் குறையும் என்று இந்த சோலார் கார் ஏசியை உருவாக்கிய வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








