அடுத்த ஆண்டு செடான் கார் அறிமுகம்: சோனாலிகா

வர்த்தக வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஃபோர்ஸ் நிறுவனம், விரைவில் எஸ்யூவீ காரை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, டிராக்டர் தயாரிப்பில் புகழ்பெற்ற பஞ்சாபை சேர்ந்த இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் குழுமத்தின் அங்கமான சோனாலிகா நிறுவனமும் புதிய செடான் காரை அறி்முகப்படுத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
புதிய காரை வடிவமைக்கும் பணிகளில் அந்த நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் புத்தம் புதிய செடான் காரை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சோனாலிகா நிறுவனத்தின் தலைவர் எல்.டி.மிட்டல் கூறியிருப்பதாவது:
" இத்தாலியை சேர்ந்த பினின்பெரினா கார் வடிவமைப்பு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் புதிய செடான் காரை வடிவமைத்து வருகிறோம். ஃபெராரி, மஸராட்டி உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் கார்களை பினின்பெரினா வடிவமைத்து கொடுத்துள்ளது.
ஐரோப்பிய நாட்டு நிறுவனங்களின் கார்களில் இருக்கும் அதே தொழில்நுட்பங்கள், தரம் மற்றும் வசதிகள் எங்களது புதிய காரில் இருக்கும். ஆனால், அந்த கார்களின் விலையுடன் ஒப்பிடும்போது எங்களது கார் பாதி விலை கொண்டதாக இருக்கும்.
2.0 லிட்டர் சிஆர்டிஇ எஞ்சினுடன் வரும் எங்களது புதிய செடான் கார் ரூ.15 லட்சம் விலையில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








