சாங்யாங்கின் புதிய எஸ்யூவீ கான்செப்ட் கார்-ஜெனிவாவில் 'ஷோ'

Ssangyong SUV
ஜெனிவா: எஸ்யூடி-1 என்ற புதிய எஸ்யூவீ ரகத்தை சேர்ந்த கான்செப்ட் காரை ஜெனிவா மோட்டார் ஷோவில் சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கொரியாவை சேர்ந்த சாங்யாங் நிறுவனம் கார் தயாரிப்பில் தனி இடத்தை பிடித்திருந்தது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய அந்த நிறுவனத்தை இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் கையகப்படுத்த உள்ளது.மஹிந்திரா புண்ணியத்தால் நிலைமை சீரடைந்துள்ளதால், மீண்டும் மார்க்கெட்டை பிடிக்கும் முயற்சிகளில் சாங்யாங் ஈடுபட்டுள்ளது.

இதற்கு முன்னோட்டமாக, ஜெனிவாவில் நடந்து வரும் சர்வதேச கார் கண்காட்சியில் புதிய எஸ்யூவீ கான்செப்ட் காரை சாங்யாங் அறிமுகப்படுத்தி உள்ளது. சாங்யாங் மோட்டார்சின் தனித்துவ வடிவமைப்புக்கு புகழ்பெற்ற ஏசிடோன் பிக்கப் மாடலை அடிப்படையாக கொண்டு புதிய எஸ்யூடி-1 கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில், பொருத்தப்பட்டிருக்கும் 2.0லிட்டர் டீசல் எஞ்சின் குறைந்த வேகத்திலும் அருமையான செயல்திறனோடு இயங்கும். இந்த எஞ்சின் குறைந்த கார்பன் புகை வெளியிடுவதால், சுற்றுச்சூழலுக்கு உகந்த காராக எஸ்யூடி-1 இருக்கும்.

இந்த கார் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் மாற்றும் வசதியுடன் வெளிவர உள்ளது. தவிர, இரண்டு வீல் மற்றும் நான்கு வீல் டிரைவிங்கை மாற்றும் வசதியும் இதில் உண்டு. அதிக வேகத்தில் செல்லும்போது காரின் எஞ்சின் சுழல்வேகம் குறைவாக இருக்கும் என்பதால், எரிபொருள் சிக்கனம் கிடைக்கும்.

கண்ணாடி கூரை,பின்னால் வரும் வாகனங்களை எளிதாக பார்க்கும் வசதியை தரும் ரியர் வீவ் கேமரா, டிரிப் கம்ப்யூட்டர், டுயல் ஏர்பேக் உள்ளிட்ட ஏராளமான வசதிகளுடன் எஸ்யூடி-1 வரவுள்ளது என்று சாங்யாங் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 4, 2011, 13:03 [IST]
English summary
The recent mega event of the automotive world, Geneva Motor Show turned out to be an ideal platform for many companies. In the scene, the Korean car maker Ssangyong muscled its power with its display of concept SUT 1.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+