வரும் 2016ம் ஆண்டில் 4 புதிய எஸ்யூவி மாடல்கள்: சாங்யாங் அறிவிப்பு

எஸ்யூவி தயாரிப்பில் தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனம் உலக அளவில் புகழ்பெற்றது. இந்த நிலையில், கடும் நிதிநெருக்கடியில் சிக்கி தவித்த சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தை மஹிந்திரா நிறுவனம் கையகப்படுத்தியது.
மஹிந்திரா வசம் வந்த பின் சாங்யாங் மோட்டார்ஸ் கார் விற்பனை நல்ல வளர்ச்சி பெற்று வருகிறது. மேலும், உலக சந்தையில் இழந்த மார்க்கெட்டை பிடிக்கும் முயற்சிகளை சாங்யாங் மேற்கொண்டுள்ளது.
இதற்காக, வரும் 2013ம் ஆண்டுக்குள் தற்போதுள்ள எஸ்யூவி மாடல்களை மேம்படுத்தி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம், வரும் 2016ம் ஆண்டில் சர்வதேச மார்க்கெட்டுக்கு தக்கவகையில்,4 புதிய எஸ்யூவி மாடல்களை களமிறக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தவிர, எலக்ட்ரிக் காரை வடிவமைத்து அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மஹிந்திராவின் உதவியுடன் கொரியாவில் சொந்த கார் பைனான்ஸ் நிறுவனத்தை துவங்கி வாடிக்கையாளர்களுக்கு கடன் வசதியை செய்து தரவும் இருக்கிறது சாங்யாங்.
மஹிந்திரா கட்டுப்பாட்டில் வந்தவுடன் சுறுசுறுப்பாக வளர்ச்சிப் பணிகளை முடுக்கிவிட்டுள்ள அந்த நிறுவனம், அடுத்த ஆண்டு இந்தியாவி்ல் தனது பிரபல எஸ்யூவி மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








