மஹிந்திரா கைராசி:சாங்யாங் மோட்டார்ஸ் கார் விற்பனை 65% உயர்வு

கடும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்த தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தை மஹிந்திரா கையகப்படுத்தியுள்ளது. மஹிந்திரா கீழ் செயல்பட துவங்கியவுடன் சாங்யாங் மோட்டார்ஸ் கார் விற்பனை ராக்கெட் வேகத்தில் செல்ல துவங்கியுள்ளது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சாங்யாங் நிறுவனம் 24,741 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில், 9,974 கார்கள் உள்நாட்டு சந்தையிலும், 14,767 கார்கள் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, சாங்யாங் விற்பனை 65 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு, அந்நிறுவனத்தின் விற்பனை அதிகபட்ச உயர்வை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சாங்யாங் மோட்டார்ஸ் தலைவர் லீ யூயில் கூறுகையில்,"கடும் சரிவிலிருந்து நாங்கள் வேகமாக மீண்டு வருகிறோம். நிறுவனத்தின் விற்பனை கணிசமாக உயர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. உற்பத்தி செலவீனம் அதிகரித்த நிலையிலும், புதிய மாடல்கள் அறிமுகம் மற்றும் விலையேற்றத்தால் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது," என்றார்.


Click it and Unblock the Notifications








