இந்தியாவின் முதல் கார்பன் ஃபைபர் ஹெல்மெட்: ஸ்டீல்பேர்டு அறிமுகம்

இலகுவான எடையும், அதிக உறுதித்தன்மையும் வாய்ந்த கார்பன் ஃபைபர் பொதுவாக விமானங்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. கார்பன் ஃபைபர் விலை அதிகம் என்பதால், விலையுயர்ந்த வாகன தயாரிப்பில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரும் தலைவலியை கொடுக்கும் ஹெல்மெட் சுமக்கும் பிரச்னையை சுகமாக்கும் வகையில் புதிய கார்பன் ஃபைபர் ஹெல்மெட்டை ஸ்டீல்பேர்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கார்பன் பைபரில் தயாரிக்கப்பட்டுள்ளதால், சாதாரண ஹெல்மெட்டுகளின் எடையை ஒப்பிடும்போது இது மிககுறைந்த இலகு எடைகொண்டதாக இருக்கிறது. மேலும், விபத்துக்களில் சிக்கினால் கூட அதிக உறுதித்தன்மை வாய்ந்த இந்த ஹெல்மெட் நிச்சயமாக கூடுதல் பாதுகாப்பை கொடுக்கும் என்று நம்பலாம்.
மேலும், நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த ஹெல்மெட் வரப்பிரசாதமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த ஹெல்மெட், புல் ஃபேஸ் மற்றும் மோனோகிராஸ் ஆகிய இரண்டு மாடல்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








