மாணவர்களுக்கு கார் தொழில்நுட்ப கல்வி வழங்குவதாக வோக்ஸ்வேகன் அறிவிப்பு

By
Volkswagen
புனே: பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ.,மாணவர்களுக்கு கார் தயாரிப்பு குறித்த தொழல்நுட்ப கல்வியை வழங்குவதற்கு வோக்ஸ்வேகன் நிறுவனம் முன்வந்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் நிறுவனம் சொகுசு கார் தயாரிப்பில் உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.இந்தியாவில் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட கார் உற்பத்தி தொழிற்சாலையை மஹாராஷ்டிர மாநிலம்,புனே அருகிலுள்ள சகனில் வோக்ஸ்வேகன் அமைத்துள்ளது.

இந்தநிலையில்,பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ.,பயிலும் மாணவர்களுக்கு கார் தயாரிப்பு தொழில்நுட்ப கல்வியை தனது கல்வி அகாடமி வாயிலாக வழங்குவதற்கு வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.இந்த அரிய வாய்ப்பு புனேயிலுள்ள மரத்வாடா மித்ரா மண்டல்ஸ் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு முதலில் கிட்டியுள்ளது.

இதுகுறி்த்து வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கூறியதாவது:

"மரத்வாடா பாலிடெக்னிக் கல்லூரியில் மோட்டார் மெக்கானிக்,டீசல் மெக்கானிக் பயிலும் ஐ.டி.ஐ.,மாணவர்களுக்கும்,மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் எஞ்சினியரிங் பயிலும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும்,தொழில்நுட்ப கல்வி வழங்க திட்டமிட்டுள்ளோம்.

எங்களது ஜெட்டா மற்றும் போலோ கார்களை தயாரிக்கும் தொழில்நுட்பம் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும்.எங்களது கல்வி மையத்தில் பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.இதன்மூலம்,மாணவர்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

இந்த தொழில்நுட்ப கல்வி வழங்கும் திட்டத்தின் மூலம் மாணவர்கள் மட்டுமின்றி,கார் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்களை சேர்ந்தவர்களும் பயன்பெற முடியும்,"என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Monday, February 14, 2011, 15:01 [IST]
English summary
The German car maker Volkswagen has a very long stint of its business in the global market in all these years. However, the company could step into the Indian market in a delayed phase that too with the back up from Skoda. After its entry the company has been doing some tremendous business to its profile through its Polo compact and Vento sedan.Of late VW has been shaping its presence through various means to reach the mass across, of which the offer of technical program for the benefit of the polytechnic student community is one.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+