சன்னி வரவால் நிசான் விற்பனை 164 சதவீதம் உயர்வு

Nissan Sunny
மைக்ரா விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாததால் சோர்ந்து போயிருந்த நிசானுக்கு சன்னி வரவு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது. கடும் போட்டிக்கு மத்தியில் கடந்த மாதம் 1,340 சன்னி கார்களை நிசான் விற்பனை செய்துள்ளது.

இதனால், நிசான் விற்பனை இருமடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் மொத்தமாக 2,990 கார்களை நிசான் விற்பனை செய்துள்ளது. இதில், 1,340 சன்னி செடான் கார்களை நிசான் விற்பனை செய்துள்ளது.

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி, வோக்ஸ்வேகன் வென்ட்டோ, ஹூண்டாய் வெர்னா, ஃபோர்டு ஆல் நியூ பியஸ்ட்டா என பெரும் போட்டியே நிலவுகிறது.

இதற்கு மத்தியில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு கடந்த 6 வாரங்களில் மட்டும் சன்னி கார் 2,000 புக்கிங்குகளை பெற்றுள்ளது. இதனால், நிசான் தற்போது உற்சாகமடைந்துள்ளது.

மேலும், விரைவில் டீசல் மாடல் சன்னி காரையும் அறிமுகப்படுத்தப் போவதாக நிசான் தெரிவித்துள்ளது. இந்தியாவில் டீசல் கார்களுக்கு அதிக தேவை இருப்பதால் டீசல் மாடல் சன்னி பெரிய வரவேற்பை பெறும் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவிக்கிறது.

சன்னி மற்றும் மைக்ரா கார்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால் அதிக தரத்துடன் உரிய விலையில் விற்பனை செய்ய முடிவதாகவும் நிசான் தெரிவிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 3, 2011, 11:36 [IST]
English summary
Nissan Motors has posted an astounding 164 per cent increase I year on year sales this October. The Japanese carmaker has sold 2,990 cars in October 2011. This increased sales is mainly due to the success of the recently launched Sunny sedan.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+