சச்சின் டெண்டுல்கரின் ஃபெராரி காரை வாங்கிய சூரத் தொழிலதிபர்

Sachin Tendulkar
சூரத்: சச்சின் டெண்டுல்கரின் 360 மொடேனா ஃபெராரி ஸ்போர்ட்ஸ் காரை, சூரத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் வாங்கியுள்ளார்.

கடந்த 2002ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் அதிக சதங்கள்(29 சதங்கள்) சாதனையை டெண்டு்ல்கர் முறியடித்ததற்காக ஃபெராரி நிறுவனம் அந்த காரை பரிசாக வழங்கியது.

இந்த காரின் சாவியை அந்த நிறுவனத்தின் அப்போதைய பார்முலா ஒன் டிரைவராக இருந்த மைக்கேல் சூமேக்கர் டெண்டுல்கரிடம் வழங்கினார்.

கார் பிரியரான டெண்டுல்கர் ஓய்வு நேரங்களில் மும்பையில் இருக்கும்போது மும்பை- புனே நெடுஞ்சாலையில் இந்த காரில் ஒரு ரவுண்டு போவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில், அந்த பெருமைமிகு காரை டெண்டுல்கர் தற்போது சூரத்தை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனமான ராஜ் ஹன்ஸ் குழுமத்தின் தலைவர் ஜெயேஷ் தேசாயிடம் விற்பனை செய்துள்ளார்.

இதுகுறித்து ஜெயேஷ் தேசாய் கூறுகையில்," ஃபெராரி கார் ஓட்டவேண்டும் என்ற எனது நீண்ட கால கனவு நனவாகியுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் காரை வாங்கியதால் இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த காரின் அனைத்து ஆவணங்களையும் சச்சினிடமிருந்து பெற்றுவிட்டேன்," என்றார்.

இந்த காரை எவ்வளவு விலைக்கு வாங்கினீர்கள்? என்ற கேள்விக்கு அவர் புன்முறுவலை மட்டும் பதிலாக தந்தார்.

Most Read Articles
English summary
Sachin Tendulkar's 360 Modena Ferrari sold to Surat businessman Jayesh Desai Raj Hans Group chairman, fortnight ago. The car was gifted to him by FIAT, which manufactures the premium Ferrari cars and endorsed by Tendulkar, after the Indian batting legend equalled Don Bradman''s tally of 29 Test centuries.
Story first published: Friday, June 24, 2011, 10:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X