பேட்டரி ஸ்விப்ட் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியது சுஸுகி

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல முன்னணி கார் நிறுவனங்கள் பேட்டரியில் ஓடும் கார்களை தயாரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த வரிசையில் ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனமும் இணைந்து கொண்டுள்ளது.
டோக்கியோவில் நடந்த ஆட்டோ கண்காட்சியில் முதல்முறையாக பேட்டரியில் ஓடும் ஸ்விப்ட் எலக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடலை சுஸுகி காட்சிக்கு வைத்திருந்தது.
இந்த கார் எலக்ட்ரிக் மற்றும் பெட்ரோலில் ஓடும் இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட காராக இருக்கும். முதலில் பெட்ரோல் எஞ்சின் மூலம் ஸ்டார்ட் ஆகும் இந்த கார் பின்னர் பேட்டரி மோட்டார்களில் இயங்கும்.
இந்த காரில் அதிகப்பட்சம் 30 கிமீ வரை பேட்டரியை கொண்டு செல்ல முடியும். தினசரி அலுவலகம் செல்வோர்க்கு இந்த புதிய ஸ்விப்ட் நிச்சயம் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வால் டீசல் கார்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் பேட்டரியில் ஓடும் இந்த ஹைபிரிட் ஸ்விப்ட் கார் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்படும்போது டீசல் கார்களுக்கான மவுசை வெகுவாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








