பெங்களூரில் கனரக வாகன தொழிற்சாலை அமைக்கும் ஸ்கேனியா

கடந்த 2007ம் ஆண்டு முதல் லார்சன் அன்ட் டூப்ரோ(எல்&டி) நிறுவனத்துடன் இணைந்து, ஸ்கேனியா நிறுவனம் இந்தியாவில் சுங்கங்களில் பயன்படுத்தப்படும் ஹெவி டிரக்குகளை விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டில் நிலையான இடம் பிடிக்கும் விதமாக புதிய தொழிற்சாலை அமைக்க ஸ்கேனியா முடிவு செய்துள்ளது.
பெங்களூரில் அமைய உள்ள இந்த தொழிற்சாலையில், ஹெவி டிரக்குகள் மற்றும் இன்டர் சிட்டி சொகுசு பஸ்களை அசெம்பிள் செய்ய ஸ்கேனியா திட்டமிட்டுள்ளது.
மேலும், வரும் செப்டம்பரில் இங்கு அசெம்பிள் செய்யப்படும் ஹெவி டிரக்குகள் மற்றும் சொகுசு பஸ்களை சாலை ஓட்ட சோதனைகள் நடத்தவும் முடிவு செய்துள்ளது.
புதிய தொழிற்சாலை அமைந்த பிறகு எல்&டி நிறுவனத்துடனான உறவு தொடருமா என்பது குறித்த கேள்விக்கு அந்த நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 2,000 ஹெவி டிரக்குகள், 1,000 சொகுசு பஸ்கள் மற்றும் 1,500 எஞ்சின்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளதாக மட்டும் கூறப்பட்டது. புதிய தொழிற்சாலைக்கு முதல்கட்டமாக 100 பேரை பணியமர்த்த இருப்பதாக ஸ்கேனியா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








