மாருதி ஸ்ட்ரைக்கால் புதிய ஸ்விப்ட் புக்கிங் செய்த வாடிக்கையாளர்கள் அச்சம்

Maruti Swift
மானேசர்: கார் சந்தையில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள புதிய ஸ்விப்ட் தற்போது பல சோதனை கட்டங்களில் சிக்கியுள்ளது. ஸ்விப்ட் கார் உற்பத்தி செய்யப்படும் மானேசர் ஆலையில் தொழிலாளர் ஸ்ட்ரைக்கால் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஸ்விப்ட் காரை புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். ஏற்கனவே, அதிக புக்கிங் காரணமாக ஸ்விப்ட் காரின் காத்திருப்பு காலம் 2 முதல் 4 மாதங்கள் வரை நீள்கிறது. இந்த நிலையில், தொழிலாளர் ஸ்ட்ரைக் காரணமாக காத்திருப்பு காலம் மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

இதனால், ஸ்விப்ட் கார் புக்கிங் செய்துவிட்டு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எப்போது கார் டெலிவிரி கிடைக்கும் என்பது தெரியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து ஸ்விப்ட் புக்கிங் செய்து காத்திருக்கும் ரவி என்பவர் குறிப்பிடுகையில்,"கடந்த மேமாதம் புதிய ஸ்விப்ட் கார் புக்கிங் செய்தேன். ஆனால், கார் எப்போது டெலிவிரி கிடைக்கும் என்று தெரியவில்லை. எவ்வளவு காலம்தான் ஸ்விப்ட் காருக்காக காத்திருக்கமுடியும்," என்று அலுத்துக்கொண்டுள்ளார்.

இதேகருத்தை பலர் தெரிவித்துள்ளனர். மேலும், தொழிலாளர் பிரச்னையால் ஸ்விப்ட் கார் டெலிவிரியில் தாமதம் ஏற்பட்டால் அது மாருதி மீதான பிராண்டு இமேஜை கெடுத்துவிடும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதிய ஸ்விப்ட் கார் உற்பத்தி பாதிக்கப்படாமலிருக்க மாருதி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. புதிதாக 200 தற்காலிக தொழிலாளர்களை நியமித்து ஸ்விப்ட் கார் உற்பத்தியை மாருதி துவங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, September 2, 2011, 10:06 [IST]
English summary
The current strike and production halt at Maruti Suzuki's Manesar plant has generated new fears about the delivery of the new Swift among buyers. They are all expressing fears about a delay in deliveries due to the strike on the new Swift's Facebook fan page. The waiting period for the new model was pegged at four months for the diesel variant and about three months for the petrol variant. While some are enquiring if the deliveries will be delayed by the strike some are worried about Maruti Suzuki's reputation taking a hit due to the strike. The Swift fan page which usually carries happy responses from new buyers and images from enthusiasts suddenly appears to have had a mood swing. Several users reported the strike at the Manesar plant and wondered if the carmaker could handle the crisis without delaying deliveries. Here is what Ravi, a Facebook user had to say about the strike: “How long will I have to wait for New Swift becoz of this strike? does Maruti Suzuki care?”
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+