20 லட்சம் ஸ்விப்ட் கார்கள் விற்பனை: மகிழ்ச்சியில் சுஸுகி

ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது ஸ்விப்ட் மாடல். கடந்த 2004ம் ஆண்டு ஸ்போர்ட்டி வடிவமைப்புடன் கூடிய இரண்டாம் தலைமுறை ஸ்விப்ட் கார் பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்களை புதிய ஸ்விப்ட் மாடல் வெகுவாக கவர்ந்தது. இதைத்தொடர்ந்து, உலகம் முழுவதும் ஏராளமான நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரிமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த ஸ்விப்ட் விற்பனையில் பல புதிய மைல்கற்களை கடந்து வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் விற்பனையில் 20 லட்சத்தை கடந்து ஸ்விப்ட் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஸ்விப்ட்டின் விற்பனையில் 39 சதவீத இடத்தை பெற்று இந்தியா உலக அளவில் முன்னிலை வகிக்கிறது. இதற்கடுத்து, 27 சதவீத இடத்தை ஐரோப்பிய சந்தை பிடித்துள்ளது.
ஸ்விப்ட்டின் தாயகமான ஜப்பான், ஸ்விப்ட்டின் மொத்த விற்பனையில் 17 சதவீத இடத்தை பெற்றுள்ளது. பிரிமியம் ரக ஹேட்ச்பேக் கார் சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும், உலகம் முழுவதும் விற்பனையில் ஸ்விப்ட் சாதித்து வருகிறது. இந்நிலையில், மூன்றாம் தலைமுறை ஸ்விப்ட் காரை விரைவில் அறிமுகப்படுத்த சுஸுகி திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








