சென்னையை ஆட்டோமொபைல் மையமாக மாற்றுவோம்: முதல்வர் ஜெயலலிதா

இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. ஃபோர்டு, ஹூண்டாய், நிசான், ரினால்ட், பிஎம்டபிள்யூ, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.
உள்நாட்டு தேவை மட்டுமின்றி அயல்நாடுகளுக்கும் கார்களை அவை ஏற்றுமதி செய்கின்றன. இதனால், லட்சக்கணக்கான வேலைவாய்ப்பு கிடைப்பது மட்டுமின்றி, அரசுக்கு அன்னிய செலாவணியும் கிடைக்கிறது.
இந்த நிலையில், பியோஜியட் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் கார் தொழிற்சாலை அமைப்பது குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. வாகன தொழிற்சாலைகள் மட்டுமின்றி அவைகளுக்கு தேவையான உதிரிபாகங்கள் உற்பத்தி ஆலைகளும் சென்னையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், சென்னையை இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் ஆட்டோமொபைல் உற்பத்தி கேந்திரமாக மாற்றுவதற்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் நேற்று தொழிற்துறை மானியக்கோரிக்கையின் மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:
இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வாகன தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் புதிதாக தொழிற்சாலை அமைக்கும் ஆட்டோ நிறுவனங்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்கும். தவிர, சென்னையை உலகின் ஆட்டோமொபைல் மையங்களில் ஒன்றாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என்றார்.
ஆட்டோமொபைல் நிறவனங்களுக்கு முன்னுரிமை மற்றும் சலுகைகள் அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதால், புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களின் கவனம் தமிழகம் பக்கம் திரும்பும் என்று ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








