குறைந்த முன்பணம் மற்றும் ரூ.45,000 வரை சலுகையுடன் டாடா மான்ஸா

என்ட்ரி லெவல் செடான் கார்களில் அதிக இடவசதி கொண்ட கார்களில் ஒன்றாக மான்ஸா திகழ்கிறது. மேலும், அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் மான்ஸா கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், பண்டிகை காலத்தையொட்டி பல முன்னணி நிறுவனங்கள் கார்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து வரும் நிலையில், மான்ஸா காருக்கு டாடா மோட்டார்ஸ் அதிரடியான சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
ரூ.50,000 முன்பணம் கட்டினால் போதும், மான்ஸாவை கடன் திட்டத்தில் வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.45,000 வரை சிறப்பு சலுகைகளையும் வழங்குவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த அதிரடி தள்ளுபடி மூலம் டாடா மான்ஸாவின் பேஸ் மாடல் ரூ.4.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தள்ளுபடியுடன் வரும் மான்ஸா ஒரு பெட்ரோல் மற்றும் மூன்று டீசல் மாடல்களில் விற்பனைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தள்ளுபடியில் மான்ஸா எக்ஸ்ஷோரூம் விலை விபரம்:
| மாடல் | முந்தைய விலை | தற்போதைய சலுகை விலை |
| மான்ஸா அக்வா (பெட்ரோல்) | ரூ.5.44 லட்சம் | ரூ.4.99 லட்சம் |
| மான்ஸா அக்வா (டீசல்) | ரூ.6.21 லட்சம் | ரூ.5.79 லட்சம் |
| மான்ஸா அவுரா (பெட்ரோல்) | ரூ.6.65 லட்சம் | ரூ.6.25 லட்சம் |
| மான்ஸா அவுரா (டீசல்) | ரூ.7.08 லட்சம் | ரூ.6.69 லட்சம் |


Click it and Unblock the Notifications








