நவீன அம்சங்களுடன் புதிய ஏசி பஸ்:டாடா அறிமுகம்

பஸ் தயாரிப்பில் டாடா மோட்டார்ஸ் முன்னிலை வகித்தாலும், சொகுசு பஸ் விற்பனையில் பின்தங்கியுள்ளது. டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்த சொகுசு பஸ்கள், வால்வோ மற்றும் பென்ஸ் போன்ற அயல்நாட்டு நிறுவனங்களின் சொகுசு பஸ்களின் தொழில்நுட்பத்துடன் போட்டியிட முடியவில்லை.
இந்நிலையில், ஸ்பெயினை சேர்ந்த ஹிஸ்பானியா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த டிவோ புதிய சொகுசு பஸ்சை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. வால்வோ மற்றும் பென்ஸ் சொகுசு பஸ்களுக்கு டிவோ கடும் போட்டியை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் பஸ் விற்பனை பிரிவு தலைவர் கூறியதாவது:
"இந்திய சாலை நிலவரங்களுக்கு தகுந்தாற்போல், உலகத்தரம் வாய்ந்த சொகுசு வசதிகளுடன் டிவோவை அறிமுகம் செய்துள்ளோம். சோதனை அடிப்படையில் 5 டிவோ பஸ்கள் தற்போது இயக்கி பரிசோதித்து வருகிறோம். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை டிவோ நிறைவாக பூர்த்தி செய்யும்.
மார்க்கெட்டில் உள்ள மற்ற சொகுசு பஸ்களின் விலையை ஒப்பிடும்போது டிவோவின் விலை குறைவாக இருக்கும்.
ஆண்டுக்கு 500 டிவோ பஸ்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இந்திய சொகுசு பஸ் மார்க்கெட்டில் டிவோ மூலம் டாடா மோட்டார்ஸ் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்கும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








