கார் உற்பத்தியை 20% வரை குறைத்தது டாடா மோட்டார்ஸ்

ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் கார் விற்பனை கணிசமாக அதிகரிக்கும். மேலும், நிதியாண்டு முடிவடைவதால் பல முன்னணி கார் நிறுவனங்கள் வழக்கத்தைவிட மார்ச்சில் உற்பத்தியை அதிகரிப்பது வழக்கம்.
இதேபோன்று, மார்ச் மாதத்தில் அதிக அளவில் கார்களை உற்பத்தி செய்ததாதல், இந்த மாதம் உற்பத்தியை டாடா மோட்டார்ஸ் குறைத்துள்ளதாக டீலர்கள் தெரிவித்தனர். இதை டாடாவும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் உயரதிகாரி தேபசிஸ் ராய் கூறியதாவது:
"கார் இருப்பை பொறுத்து மாதத்திற்கு மாதம் உற்பத்தியை நிர்ணயிப்பது வழக்கமான நடைமுறைதான். கடந்த மாதம் அதிகமாக உற்பத்தி நடந்ததால், இந்த மாதம் கார் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நானோ காரின் உற்பத்தி குறைக்கப்படவில்லை. வரும் மேமாதம் வரை உற்பத்தி குறைப்பு தொடரும். அதற்கு பிறகு கார் இருப்பை பொறுத்து உற்பத்தி அதிகரிக்கப்படும்," என்றார்.


Click it and Unblock the Notifications








