பழைய காரை டெலிவிரி செய்த டாடா டீலருக்கு அபராதம்:குறைதீர் ஆணையம் அதிரடி

இமாச்சலப் பிரதேசம், உனா மாவட்டத்திலுள்ள சலோ கிராமத்தை சேர்ந்தவர் வீரேந்தர் ஜஸ்வால். இவர் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 17ந் தேதி மொஹாலியிலுள்ள டாடா மோட்டார்ஸ் டீலரான ஹோல்டிங் ஹிந்த் மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து இண்டிகா விஸ்டா காரை வாங்கினார்.
ஆனால், அந்த கார் டெலிவிரி செய்யப்பட்டபோது,325 கி.மீ.,ஓடியிருந்தது ஸ்பீடோமீட்டரில் தெரிந்தது. இதுபற்றி அவர் விசாரித்தபோது, கார் டெல்லியிலுள்ள டீலரிடமிருந்து வாங்கி பின் அதை தரைமார்க்கமாக மொஹாலி வரை ஓட்டிவந்தது தெரிந்தது.
டீலரில் கார் சொந்த உபயோகத்துக்கும் பயன்படுத்தப்பட்டு பின் டெலிவிரி கொடுக்கப்பட்டிருந்தது மேலும், கார் விபரங்கள் குறித்த வீரேந்தருக்கு அதிரச்சி காத்திருந்தது. வீரேந்தரிடம் கொடுக்கப்பட்டிருந்த ஆவணங்களில் கார் 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் தயாரிப்பு தேதி(மேனுஃபேக்ச்சரர் டேட்)குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், அந்த காரின் உண்மையான தயாரிப்பு தேதி 2008ம் ஆண்டு என தெரிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த வீரேந்தர், டீலரின் பித்தலாட்டம் குறித்து மொஹாலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார். அதில், பழைய காரை பெற்றுக்கொண்டு, புதிய காரை வழங்க டீலருக்கு உத்தரவிடவேண்டும்,என கோரினார்.
இதை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், வாடிக்கையாளரிடம் தவறான தகவல்களை தெரிவித்து, காரை டெலிவிரி செய்த ஹோல்டிங் ஹிந்த் மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.25,000ஐ மனுதாரருக்கு நஷ்டஈடாக ஒரு மாதத்திற்குள் வழங்குமாறு உத்தரவிட்டது. மேலும், வழக்கு செலவீனமாக ரூ.2,000 செலுத்தவும் உத்தரவிட்டது. அதேவளை, காரை மாற்றி தரவேண்டும் என்ற வீரேந்தரின் கோரிக்கையை குறைதீர் ஆணையம் நிராகரித்தது.


Click it and Unblock the Notifications