நானோவுக்கு புதிய டீலர்களை நியமிக்க டாடா மோட்டார்ஸ் தீவிரம்

மார்க்கெட்டில் மிகக்குறைந்த விலை காராக இருக்கும் நானோவின் விற்பனையை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் மிக தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் கூடுதல் அம்சங்களுடன் நானோவை டாடா அறிமுகம் செய்தது. மேலும், குறைந்த முன்பணம், எளிய மாதத்தவணை கொண்ட கடன் திட்டங்கள் உள்ளிட்ட சலுகைகளை டாடா மோட்டார்ஸ் வழங்கி வருகிறது.
இருப்பினும், நானோவின் விற்பனை டாடா மோட்டார்ஸ் எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லை. இதையடுத்து, நானோவின் பிரத்யேக ஷோரூம்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க டாடா முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது நானோவுக்கு 80 பிரத்யேக ஷோரூம்கள் இருக்கின்றன. மேலும், மொத்தமாக 704 டாடா ஷோரூம்களிலும் நானோ கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நானோவுக்கு கூடுதலாக 300 பிரத்யேக ஷோரூம்களை திறக்க டாடா முடிவு செய்துள்ளது. குறிப்பாக, இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் புதிய டீலர்களை நியமிக்கவும் டாடா முன்னுரிமை கொடுக்க உள்ளது.


Click it and Unblock the Notifications








