லிட்டருக்கு 46.33 கி.மீ. தரும் வகையில் கார் ஓட்டி கோவை எஞ்சினியர் சாதனை

Driving Record
கோயம்புத்தூர்: லிட்டருக்கு 46.33 கி.மீ. செல்லும் வகையில் டாடா மான்சா காரை ஓட்டி கோவையை சேர்ந்த எஞ்சினியர் சாதனை புரிந்துள்ளார். அவரது இந்த சாதனை லிம்கா புத்தகத்தில் இடம்பெறுகிறது.

கோவையை சேர்ந்தவர் நாராயணன் மேனன். இவர் அங்குள்ள ஆரோமென் நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், டாடா நிறுவனத்தின் மான்சா குவாட்ராஜெட் டீசல் காரை சமீபத்தில் வாங்கினார். இந்த காரை அவர் அதிக மைலேஜ் கொடு்க்கும் விதத்தில் டிரைவிங் செய்து அசத்தி வருகிறார்.

இந்த நிலையில், லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறும்விதமாக சமீபத்தில் இவர் கோவை-அவினாசி நெடுஞ்சாலையில் தனது காரை ஓட்டி காட்டினார். என்ன ஆச்சரியம். கோவை-அவினாசி இடையிலான 72.3 கி.மீ. தூரத்தை அந்த கார் வெறும் 1.58 லிட்டர் டீசலில் கடந்தது.

இதையடுத்து, நாராயணன் மேனனின் பெயர் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது. இந்த சாதனை குறித்து நாராயணன் மேனன் கூறுகையில்," நல்ல பராமரிப்பும், முறையான டிரைவிங் செய்தாலே கார் நல்ல மைலேஜ் கொடுக்கும்" என்கிறார் மிகவும் தன்னடக்கத்துடன்.

Most Read Articles
English summary
The Tata Manza (Quadrajet Diesel) has clocked an incredible mileage of 46.33 km per litre. This feat has been achieved by Narayanan Menon, a resident of Coimbatore who has zoomed into the Limca Book of Records.
Story first published: Tuesday, June 7, 2011, 14:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X