டிரக்குகளை சப்ளை செய்ய டாடா மோட்டார்சுக்கு'பல்க்'ஆர்டர்

By
TATA Prima Truck
மும்பை: 250 நவீன ரக பிரைமா டிரக்குகளை சப்ளை செய்ய 'பல்க்'ஆர்டர் கிடைத்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

சரக்கு வாகன தயாரிப்பில் டாடா மோட்டார்ஸ் சர்வதேச அளவில் பிரபல நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனத்தின் நவீன வசதிகள் கொண்ட பிரைமா பிரிமியம் ரக டிரக்குகள்,சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில்,ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் 50ஆண்டுகளாக சரக்கு போக்குவரத்தில் புகழ்பெற்ற லின்பாக்ஸ் நிறுவனம் 250 பிரைமா டிரக்குகளை சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறி்த்து டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட அறிக்கையில்,"பல்வேறு கட்ட தரச்சோதனைகளுக்கு பின்னர் லின்பாக்ஸ் நிறுவனம் இந்த ஆர்டரை வழங்கியுள்ளது.இதன்மூலம்,டாடா மோட்டார்சின் வர்த்தகம் கணிமான வளர்ச்சி காணும்.

லின்பாக்சுக்கு பிரைமா டிரக்குகள் சப்ளை செய்யும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது.வரும் மார்ச் மாதம் 50 டிரக்குகள் சப்ளை செய்யப்படும்.இரண்டு ஆண்டுகளில் டிரக்குகள் அனைத்தும் சப்ளை செய்யப்பட்டுவிடும்,"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடாவிடமிருந்து வாங்கப்படும் பிரைமா டிரக்குகளை இந்தியாவில் சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்த லின்பாக்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கர்நாடகாவை சேர்ந்த வி.ஆர்.எல்.,லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து டிரக்குகளை சப்ளை செய்ய ரூ200கோடி மதிப்புடைய ஆர்டரை பெற்றுள்ளதாக அசோக் லேலண்டு நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 12, 2011, 11:32 [IST]
English summary
The automobile giant Tata Motors has announced that it has bagged an order to supply around 250 Prima trucks to LINFOX Logistics. The Prima trucks are part of Tata's premium-end World Truck model series.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+