1,111 டிரக்குகளை சப்ளை செய்ய டாடாவுக்கு பல்க் ஆர்டர்

Tata Prima
மும்பை: டிரக்குகளை சப்ளை செய்வதற்காக பிரபல சரக்கு போக்குவரத்து நிறுவனத்திடமிருந்து, ரூ.150 கோடி மதிப்புடைய பல்க் ஆர்டரை டாடா மோட்டார்ஸ் பெற்றுள்ளது.

டிரக் தயாரிப்பில் டாடா மோட்டார்ஸ் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நவீன தொழில்நுட்பம், கட்டுமானம், எரிபொருள் சிக்கனம் கொண்ட டிரக்குகளுக்கு வர்த்தகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து நிறுவனமான சூரத்தை சேர்ந்த சித்திவிநாயக் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து, 1,111 டிரக்குகளை சப்ளை செய்வதற்கான பல்க் ஆர்டரை டாடா மோட்டார்ஸ் பெற்றுள்ளது.

இந்த ஆர்டரின்படி, நடுத்தர மற்றும் கனரக டிரக்குகளை சித்திவிநாயக் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திற்கு டாடா மோட்டார்ஸ் சப்ளை செய்யும்.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு தலைவர் வினோத் சகாய் கூறுகையில்,"இந்த மாத முதல் சித்திவிநாயக் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திற்கு டிரக் சப்ளை துவங்கும். நடப்பு நிதியாண்டு முடிவிற்குள் அனைத்து டிரக்குகளையும் சப்ளை செய்து முடிக்க திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

ஸ்டீல், சிமென்ட், கெமிக்கல்ஸ் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சித்திவிநாயக் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் தற்போது பழங்கள் மற்றும் காய்கறிகளை குளிர்சாதன வசதி கொண்ட டிரக்குகளில் கொண்டு செல்லும் வர்த்தகத்திலும் ஈடுபட உள்ளது. சித்திவிநாயக் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திடம் தற்போது 2,000 டிரக்குகள் உள்ளன.

Most Read Articles
English summary
Tata Motors has announced that it has bagged an order worth an estimated Rs 150 crore to supply 1,111 medium and heavy trucks to Surat-based Siddhivinayak Logistics Ltd (SVLL).
Story first published: Sunday, June 12, 2011, 10:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X