டாடா மோட்டார்ஸ் சிஇஓ பீட்டர் ஃபார்ஸ்டர் திடீர் ராஜினாமா

Peter Forster
டாடா மோட்டார்ஸ் தலைமை செயல் அதிகாரி கார்ல்- பீட்டர் ஃபார்ஸ்டர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் கார்ல்- பீட்டர் ஃபார்ஸ்டர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதவி ஏற்றார்.

இவரது தலைமையின் கீழ் டாடா மோட்டார்ஸ் சர்வதேச அளவில் நல்ல வளர்ச்சியை பெற்றது. மேலும், சர்வதேச அளவில் மேற்கொண்டு வரும் விரிவாக்கப்பணிகளிலும் முக்கிய காரணகர்த்தாகவும் இருந்தார்.

இந்த நிலையில், அவர் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். தவிர்க்க முடியாத சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா குறிப்பிடுகையில்," பீட்டர் ஃபார்ஸ்டரின் சொந்த விஷயங்களுக்கு டாடா மோட்டார்ஸ் மதிப்பளிக்கிறது. டாடா மோட்டார்ஸ் வளர்ச்சியல் பீட்டர் ஃபார்ஸ்டர் ஆற்றிய பணிகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர் தொடர்ந்து போர்டின் நான்-எக்ஸிக்யூட்டிவ் உறுப்பினராக செயல்படுவார்," என்று கூறினார்.

இதுகுறித்து பீட்டர் ஃபார்ஸ்டர் கூறுகையில்,"எனது சொந்த காரணங்களால் சவால்கள் நிறைந்த இந்த பணியை தொடர முடியாததற்காக வருத்தப்படுகிறேன். ஆனால், தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் வளர்ச்சியில் நான்-எக்ஸிக்யூட்டிவ் உறுப்பினராக எனது பங்கு நி்ச்சயம் இருக்கும்," என்றார்.

பீட்டர் ஃபாஸ்டர் ராஜினாமாவை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் பிரகாஷ் தலாங்கும், ஜாகுவார் லேண்ட்ரோவர் விவகாரங்களை அதன் சிஇஓ டாக்டர் ரால்ப் ஸ்பெத் கவனித்துக்கொள்வர் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 10, 2011, 12:06 [IST]
English summary
Tata Motors Limited has announced that Mr. Carl-Peter Forster will; no longer be the Group CEO and MD, with immediate effect, due to his unavoidable personal circumstances. However, at the request of the Board, Mr. Forster will continue to serve the Board of Tata Motors Limited as a non-executive member. Mr. Prakash Telang, MD of India Operations, and Dr. Ralf Speth, CEO of Jaguar Land Rover, will represent their respective operations on the Board.Mr. Ratan N. Tata, Chairman of the Board of Tata Motors, noted: "The Board respects Carl-Peter's personal circumstances that led to this move. We would like to thank him for his contributions to the successful development of our company in his role as Group CEO and MD. We are looking forward to continue to working with him as a non-executive member of the Board."
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+