டாடா மோட்டார்ஸ் சர்வதேச விற்பனை சதவீதம் அதிகரிப்பு

Tata Motors
மும்பை: கடந்த மேமாதம் சர்வதேச அளவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

அனைத்து பிரிவுகளையும் சேர்த்து கடந்த மாதம் அந்த நிறுவனம் மொத்தமாக 88, 251 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இதில், டாடா கீழ் செயல்பட்டு வரும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனங்களின் கார் விற்பனையும் அடங்கும்.

வர்த்தக பிரிவில் டாடா, டாடா தேவூ, டாடா ஹிஸ்பானோ ஆகிய பிராண்டுகளில் அந்த நிறுவனம் 44, 070 வாகனங்களை விற்றுள்ளது. இது 20 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.

இதேபோல், கடந்த மாதம் அந்த நிறுவனம் 44, 181 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

மேலும், கடந்த மாதம் 22,296 லேண்ட் ரோவர் கார்கள் விற்பனையாகி 17 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதேவேளை, ஜாகுவார் கார் விற்பனை 18 சதவீதம் சரிவு கண்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 16, 2011, 11:06 [IST]
English summary
Tata Motors announced on yesterday an 11 per cent growth in total global sales for the month of May at 88,251 vehicles. The sales includes Tata-owned British brand Jaguar Land Rover (JLR)
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+