நவம்பரில் டாடா மோட்டார்ஸ் ச்ர்வதேச விற்பனை 35 % அதிகரிப்பு

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கடந்த மாதம் சர்வதேச அளவில் மொத்தம் 1,08,028 வாகனங்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில் இது 35 சதவீதம் கூடுதலாகும்.
இதில், டாடா, டாடா தேவூ, டாடா ஹிஸ்பானோ கரோசிரா ஆகிய வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மொத்தம் 49,724 வாகனங்களை விற்பனை செய்துள்ளன. இது கடந்த ஆண்டு நவம்பரை காட்டிலும் 24 சதவீதம் அதிகம்.
கடந்த நவம்பரில் 58,304 பயணிகள் வாகனங்கள்(ஜாகுவார், லேண்ட் ரோவர் உள்பட) விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு விற்பனையை ஒப்பிடும்போது 47 சதவீதம் அதிகரித்துள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








