லிட்டருக்கு 25கி.மீ செல்லும் இண்டிகா இவி2

Indica EV2
சிறிய கார்களில் டாடாவின் இண்டிகா மாடல் இடவசதியிலும், மைலேஜிலும் சிறந்து விளங்குகிறது. இந்நிலையில், சந்தை போட்டியை சமாளிக்கும் விதத்தில் மேம்படுத்தப்பட்ட இண்டிகா மாடல்களை டாட மோட்டார்ஸ் அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில், இண்டிகா இவி2 என்ற புதிய மாடலை டாடா அறிமுகம் செய்துள்ளது.

புதிய இண்டிகா இவி2 மாடலில் அதிக மைலேஜ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தும் எஞ்சினை பொருத்தியுள்ளது டாடா மோட்டார்ஸ். இதில், டீசல் எஞ்சின் லிட்டருக்கு 25 கி.மீ., செல்வதாக இந்திய ஆட்டோமொபைல் ஆராய்ச்சி கூட்டமைப்பு(ஏஆர்ஏஐ) சான்று வழங்கியுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது.

மரவேலைப்பாடுகளுடன் கூடிய இண்டீரியர் , யுஎஸ்பி போர்ட், புளுடூத் மற்றும் மியூசிக் சிஸ்டம் உள்ளிட்ட நவீன அம்சங்களுடன் புதிய இண்டிகா இவி2 வந்துள்ளது. மேலும், பழைய மாடல்களைவிட எடையிலும் 10 கிலோ குறைந்துள்ளது.

பாரத் ஸ்டேஜ்-4 மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்குட்ப்பட்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள இண்டிகா இவி2வை சவாலான விலையில் களமிறக்கியுள்ளது டாடா. இண்டிகா இவி2 பெட்ரோல் மாடல் ரூ.2.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.3.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 22, 2011, 9:14 [IST]
English summary
Tata Motors has unveiled the new Tata Indica variant Tata Indica EV2. Tata Indica EV2 is been offered both in petrol and diesel engine options.Tata Motors are the masters in pricing their products competitively.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+