டாடா கார்க விலை கிடு கிடு உயர்வு: டாடா அறிவிப்பு!

மற்ற கார்களின் விலையை உடனடியாக உயர்த்தியுள்ள டாடா, நானோவின் விலையை மட்டும் வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து ரூ 36000 உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது.
உற்பத்திப் பொருள் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு காரணமாக இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாக உள்ளது என அந்நிறுவனம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
டாடாவின் பிரபல மாடல்களான இன்டிகா விலை ரூ 7000 முதல் 9000 வரையும், விஸ்டா மற்றும் இண்டிகோ சிஎஸ் விலை ரூ 8000 முதல் 11000 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. இன்டிகோ மான்ஸா விலை ரூ 10000 முதல் 15000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
டாடா சுமோ ரூ 13000 முதல் ரூ 15000, கிராண்டே ரூ 16000 முதல் ரூ 19000, சபாரி ரூ 18000 முதல் 29000, ஆரியா ரூ 30000 முதல் 36000 மற்றும் வென்ச்சர் ரூ 9000 முதல் 12000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
நானோவுக்கான விலை உயர்வு மட்டும் ஏப்ரல் மாதத்திலிருந்து அமலுக்கு வருகிறது.
நானோவின் விற்பனை மிகவும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த மாடல் அறிமுகமானபோது ஏராளமானோர் வாங்குவதற்குக் காத்திருந்தனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக நானோ அடிக்கடி தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளதால், விற்பனை அடியோடு வீழ்ச்சி கண்டுள்ளது.
மற்ற மாடல்களில் இப்போது டாடா விஸ்டா மற்றும் இன்டிகோ மான்ஸா மட்டுமே ஓரளவு விற்பனையாகி வருவதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








