பழைய கார்களுக்கு டாடா வழங்கும் அதிரடி எக்ஸ்சேஞ்ச் சலுகைகள்

Tata Offer
எந்த நிறுவனத்தின் கார் மாடலாக இருந்தாலும், எந்த கண்டிஷனில் இருந்தாலும் பழைய கார்களுக்கு ரூ.40,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. இண்டிகா இசிஎஸ், விஸ்டா மற்றும் மான்ஸா கார்களுக்கு இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

ஆண்டு இறுதியில் கார் விற்பனை மந்தமாக இருக்கும் என்பதால் விற்பனையை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் அதிரடி எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த எக்ஸ்சேஞ்ச் திட்டப்படி, பழைய கார் எந்த கண்டிஷனில் இருந்தாலும் அந்த காரின் மதிப்பில் கூடுதலாக ரூ.40,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்குவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், அந்த கார் எந்த நிறுவனத்தின் பிராண்டாக இருந்தாலும் பரவாயில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இண்டிகா இசிஎஸ், இண்டிகா விஸ்டா மற்றும் இண்டிகோ மான்ஸா கார்களுக்கு மட்டும் இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இந்த மூன்று கார்களுக்கும் மிகக்குறைந்த முன்பணம் கட்டினால் போதும் என்றும் டாடா தெரிவித்துள்ளது. இண்டிகா இசிஎஸ் காருக்கு ரூ.35,000மும், விஸ்ட்டாவுக்கு ரூ.30,000மும், மான்ஸாவுக்கு ரூ.50,000மும் முன்பணம் கட்டினால் காரை ஓட்டிச்செல்லலாம் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், பண தள்ளுபடி சலுகையையும் வழங்குவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இண்டிகா இசிஎஸ் காருக்கு ரூ12.000மும், விஸ்ட்டாவுக்கு ரூ.10,000மும், இண்டிகா மான்ஸாவுக்கு ரூ.20,000மும் நேரடி பணச் சலுகையை பெற முடியும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, November 18, 2011, 12:07 [IST]
English summary
Selling your used car was never so easy if you want to exchange it for a Tata Indica eCS or the Indica Vista or the Indigo Manza. Tata Motors is offering a great exchange scheme for the buyers of the above mentioned cars.The deal form Tata Motors provides buyers a whopping Rs.40,000 extra price for your old car along with a cash discount. There is no restriction on which model you want to sell and Tata will not even ask you the condition of the old car. All you have to do is drive to your closes Tata Motors showroom and exchange it for the Indica eCS, Indica Vista or the Indigo Manza.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+