டாடா இண்டிகா எலக்ட்ரிக் கார் விரைவில் பிரிட்டனில் அறிமுகம்

E Vista Electric Car
லண்டன்: டாடா இண்டிகா எலக்ட்ரிக் கார் மாடலை விரைவில் பிரிட்டனில் அறிமுகப்படுத்துகிறது டாடா மோட்டார்ஸ்.

உலகின் முக்கிய ஆட்டோமொபைல் சந்தைகளில் ஒன்றான ஐரோப்பிய சந்தையில் முக்கிய இடம் பிடித்துவிட வேண்டும் என டாடா மோட்டார்ஸ் துடிக்கிறது. இதற்கு ஏற்ப காய்களையும் நகர்த்தி வருகிறது.

போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ற வகையில், நானோ பேஸ் மாடலை அடிப்படையாக கொண்ட பிக்செல் காரை ஐரோப்பிய சந்தைக்கென உருவாக்கி வருகிறது டாடா. இந்த காரின் கான்செப்ட மாடல் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தனது பிரபலமான இண்டிகா விஸ்டா ஹேட்ச்பேக் காரின் எலக்ட்ரிக் மாடலை பிரிட்டனில் அறிமுகப்படுத்துகிறது டாடா மோட்டார்ஸ். இ-இண்டிகா என்ற பெயரில் வரவுள்ள இந்த எலக்ட்ரிக் கார் இந்த ஆண்டு மத்தியில் பிரிட்டனில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

நான்கு பேர் அமர்ந்து பயணம் செய்யக்கூடிய வகையில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இ-இண்டிகா ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கி.மீ., வரை செல்லும். இதற்கான செலவு வெறும் ரூ.107 மட்டுமே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, மணிக்கு அதிகப்பட்சம் 114 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன்கொண்டதாக இ-இண்டிகா வரவுள்ளது. லித்தியம் அயான் பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் எஞ்சினுடன் இ-இண்டிகா வருகிறது. எலக்ட்ரிக் கார்களில் பெரும்பாலான இடத்தை அதில் பொருத்தப்படும் பேட்டரி அடைத்துக்கொள்ளும்.

ஆனால், இ-இண்டிகாவில் சாமான்கள் வைப்பதற்கு இடவசதி தாரளமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் 20,000 பவுண்டு (இந்திய மதிப்பில் ரூ.14.33 லட்சம்) விலையில் விற்பனைக்கு வரும் இ-விஸ்டாவை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என டாடா கைவிரித்துவிட்டது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 2, 2011, 12:24 [IST]
English summary
To capture the foreign auto market Tata Motors’ is now vying to launch an electric version of its popular hatchback car Indica Vista for the United Kingdom, which will be pronounced as E-Indica. Although there are no plans from India’s biggest automotive company to introduce any e-car for the Indian shores.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+