மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி:டாடா மோட்டார்ஸ் துவக்கம்

By
Tata Mototos Sport
மும்பை: 'டாடா மோட்டார்ஸ் ஃபுல் த்ராட்டிள்'என்ற கார் பந்தய அணியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் துவக்கியுள்ளது.

இந்தியாவில் பைக் மற்றும் கார் பந்தயங்கள்(மோட்டார்ஸ்போர்ட்ஸ்) பிரபலமடைந்து வருகின்றன.பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்ப வலிமையை பறைசாற்றும் வகையில்,மோட்டார்ஸ்போர்ட்ஸ் பந்தயங்களில் தங்களது தயாரிப்புடன் கூடிய அணியை களமிறக்குவது வாடிக்கையாகி வருகிறது.

இந்த வரிசையில்,டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.'டாடா மோட்டார்ஸ் ஃபுல் த்ராட்டிள்'என்ற மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணியை டாடா மோட்டார்ஸ் துவங்கியுள்ளது.வரும் 22ந்தேதி ஆமதாபாத் நகரில் துவங்க உள்ள கார் பந்தயத்தில் டாடா மோட்டார்ஸ் புல் த்ராட்டிள் அணி பங்கேற்க உள்ளது.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனப் பிரிவு துணைத் தலைவர் கூறியதாவது:

"கார் மற்றும் பைக் பந்தயங்களுக்கு இந்தியாவில் உள்ள வரவேற்பை கருத்தில்க்கொண்டு மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணியை உருவாக்கி உள்ளோம்.இந்த அணியில் அனுபவமிக்க வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அடுத்த வாரம் ஆமதாபாத்தில் துவங்கவுள்ள'டெசர்ட் ஸ்டோர்ம் ராலி' பந்தயத்தில் இந்த அணி பங்கேற்கும்.இந்த பந்தயத்தில்,இரண்டு டாடா சஃபாரி மற்றும் இரண்டு டாடா சீனான் XT வாகனங்கள் பங்கேற்கும்.

இந்த போட்டிகளின் மூலம்,டாடா நிறுவனத்தின் கார்களை பிரபலபடுத்தவும்,தொழில்நுட்ப வலிமையை எடுத்துக்காட்டவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.ஆமதாபாத் பந்தயம் தவிர,இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள 'ரெய்டு டி ஹிமாலயாஸ்' கார் பந்தயத்திலும் டாடா மோட்டார்ஸ் அணி பங்கேற்க உள்ளது,"என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Friday, February 18, 2011, 12:28 [IST]
English summary
Good news for Motorsports lovers in India! One of the country’s biggest brand in automobile sector, Tata Motors, has entered into the world of racing with the launch of ‘Tata Motors Full Throttle‘. Realizing the potential of motorsports market in India, which is still in its nappies, Tata Motors has announced to tap in the market while it is still growing.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+