மஹிந்திரா புதிய எஸ்யூவிக்கு போட்டியாக வரும் டாடா மெர்லின் எஸ்யூவி

டாடா மெர்லின் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய எஸ்யூவி டாடா சஃபாரி எஸ்யூவியின் மேம்படுத்திய மாடலாக வருகிறது. தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரிட்டனை சேர்ந்த லேண்ட் ரோவர் நிறுவனத்தின் எஞ்சினியர்கள் ஒத்துழைப்புடன் புதிய எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் வடிவமைத்துள்ளது.
இதனால், புதிய எஸ்யூவி குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும், மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் குறைந்த விலையில் புதிய எஸ்யூவியை சர்வதேச தரத்தில் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளதால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே, மார்க்கெட் பங்களிப்பை தக்கவைத்துக்கொள்ள புதிய எஸ்யூவியை விரைவில் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் டாடா மோட்டார்ஸ் உள்ளது. இந்த நிலையில், வடிவமைப்பு மற்றும் வசதிகளில் பல்வேறு கூடுதல் சிறப்புகளுடன் மெர்லினை டாடா வடிவமைத்துள்ளதாக தெரிகிறது.
மேலும், இந்த புதிய எஸ்யூவியை விரைவில் அறிமுகம் செய்வதற்காக, அதன் இறுதிக் கட்ட சோதனைகளை டாடா மோட்டார்ஸ் தீவிரமாக நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய எஸ்யூவி நிச்சயம் மஹிந்திராவின் புதிய எஸ்யூவிக்கு கடும் சந்தை போட்டியை கொடுக்கும் விதத்தில் இருக்கும் டாடா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், மெர்லினுக்கு டாடா மோட்டார்ஸ் நிர்ணயிக்கும் விலை பொருத்துதான் மஹிந்திரா புதிய எஸ்யூவிக்கு அது போட்டியை கொடுக்குமா, இல்லையா என்பதை கூறமுடியும்.


Click it and Unblock the Notifications








