கார்களுக்கு டாடாவின் புதிய 'மைலேஜ் சவால்' டிவி விளம்பரம்

சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்திய இண்டிகா இவி-2 மற்றும் இண்டிகோ இசிஎஸ் கார்களுக்கு நாளை முதல் தொலைக்காட்சிகளில் புதிய விளம்பரம் ஒளிபரப்பாக உள்ளது.

லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தரும் இண்டிகா இவி-2 ஹேட்ச்பேக் காரையும், இண்டிகோ இசிஎஸ் செடான் காரையும் டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்தது.

நவீன தொழில்நுட்ப வசதிகள், புதிய கிராபிக்ஸ் டிசைன்களுடன் வந்துள்ள இந்த கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. மேலும், இந்திய கார் மார்க்கெட்டில் அதிக மைலேஜ் கொடுக்கும் கார்களாக இந்த

இரண்டு கார்களிலும் அதிக பிக்கப் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை ஒருங்கே வழங்க வல்ல சிஆர்-4 காமன் ரயில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், முந்தயை மாடலைவிட 10 எடை குறைவானதாகவும் இருக்கிறது.

இந்த இரண்டு கார்களின் மைலேஜ் திறனை வாடிக்கையாளர்களே சோதித்துக்கொள்ளும் வகையில் புதிய இண்டிகா இவி-2 மற்றும் இண்டிகோ இசிஎஸ் கார்களின் மைலேஜ் சவால் நிகழ்ச்சிகளை பல நகரங்களில் டாடா மோட்டார்ஸ் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், இந்த இரண்டு கார்களும் அதிக மைலேஜ் கொடுப்பதை அடிப்படையாக வைத்து புதிய டிவி விளம்பரத்தை டாடா மோட்டார்ஸ் தயாரித்துள்ளது.

இந்த புதிய தொலைக்காட்சி விளம்பரம் இன்று மாலை அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும், நாளை முதல் தொலைக்காட்சிகளில் இந்த புதிய விளம்பரம் ஒளிப்பரப்பாகிறது. இந்த நிலையில், ஒருநாள் முன்பே இந்த புதிய விளம்பரத்தை வாசகர்கள் கண்டு மகிழும் வாய்ப்பை ஒன்இந்தியா வழங்குகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 30, 2011, 18:14 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+