தென்ஆப்ரிக்காவில் வாகன தொழிற்சாலை: டாடா திறந்தது

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் சர்வதேச அளவில் வர்த்தகத்தை விரிவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
வர்த்தக விரிவாக்கத்திற்கு ஏதுவாக உலகின் பல்வேறு நாடுகளில் வாகன தொழிற்சாலைகளை அமைக்கவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, தென் ஆப்ரிக்காவிலுள்ள ரோஸ்லின் என்ற இடத்தில் வர்த்தக வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் அசெம்பிளிங் ஆலையை திறந்துள்ளது.
ஆண்டு்க்கு 3,650 வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையில், 4 டன் முதல் 50 டன் வரையிலான சரக்கு வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென் ஆப்ரிக்க வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் ராப் டேவிஸ் கூறுகையில்,"தென் ஆப்ரிக்காவில் டாடா ஆலை அமைத்துள்ளதை வரவேற்கிறோம். மேலும், இங்கு விரிவாக்க பணிகளை டாடா மேற்கொள்வதற்கும் அனைத்து ஒத்துழைப்பையும் அரசு கொடுக்கும்," என்றார்.


Click it and Unblock the Notifications








